Home » News » Coronavirus-latest-news » DMK MLA J ANBAZHAGAN ADMITTED HOSPITAL AFTER CORONA POSITIVE SAN

திமுக எம்.எல்.ஏ அன்பழகன் உடல்நிலை எப்படி உள்ளது? மருத்துவமனை அறிக்கை

DMK MLA J Anbazhagan | கொரோனா பாதித்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள திமுக எம்.எல்.ஏ அன்பழகன் உடல்நிலை பற்றி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

திமுக எம்.எல்.ஏ அன்பழகன் உடல்நிலை எப்படி உள்ளது? மருத்துவமனை அறிக்கை
ஜெ. அன்பழகன்
  • News18
  • Last Updated: June 4, 2020, 7:26 PM IST
  • Share this:
திமுக எம்.எல்.ஏ., ஜெ. அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகன், ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்

இதனிடையே, கடந்த 2 நாட்களாக அவர் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்ட நிலையில், நேற்று முன்தினம் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைக்காக சென்றார்.


அப்போது, கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதுடன், மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வருகின்றனர்

ஏற்கனவே ரத்த அழுத்தம் உள்ளிட்ட உபாதைகளால் அன்பழகன் அவதிப்பட்டு வந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது மாஸ்க் வழியே ஆக்சிஜன் செலுத்தப்பட்ட நிலையில், தற்போது 80 சதவிகித ஆக்சிஜன் வெண்டிலேட்டர் வழியே செலுத்தப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மருத்துவ அறிக்கை
கடந்த 24 மணி நேரத்தில் அவரின் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Also Read:

தனியார் மருத்துவமனையிலும் கட்டணமில்லாமல் கொரோனா சிகிச்சை - படிக்க

அம்மனாக ஜொலிக்கும் ’லேடி சூப்பர் ஸ்டார்’










First published: June 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading