• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • துரைமுருகன் உடன் தொடர்பில் இருந்த மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று இல்லை

துரைமுருகன் உடன் தொடர்பில் இருந்த மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று இல்லை

துரைமுருகன் - ஸ்டாலின்

துரைமுருகன் - ஸ்டாலின்

துரைமுருகன் உடன் தொடர்பில் இருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று இல்லை பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

  • Share this:
    திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு திமுக பொதுச்செயலளார் துரைமுருகன் தீவிர கட்சி பணயில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் லேசான கொரோனா அறிகுறி இருந்ததையடுத்து அவர் நேற்று மருத்துவமனையில் பரிசோதனை எடுத்துக் கொண்டார்.

    பரிசோதனையின் முடிவில் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து துரைமுருகன் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்.

    துரைமுருகன் 2 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. இந்த தகவலை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலாயம் உறுதிப்படுத்தி உள்ளது.

    இதனிடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை துரைமுருகன் நேற்று சந்தித்து தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தி உள்ளார். அப்போது தனக்கு உடல் சோர்வாகவும், அயர்வாகவும் உள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருடன் தொடர்பில் திமுக தலைவர் ஸ்டாலினும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இதில் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று இல்லையென்று பரிசோதனையின் முடிவில் தெரியவந்துள்ளது.



    மேலும் துரைமுருகன் உடன் தொடர்பில் இருந்த மற்ற கட்சி நிர்வாகிகளும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். திமுக மகளிரணி செயலாளரும் எம்பியுமான கனிமொழி கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில் தற்போது துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: