ஹோம் /நியூஸ் /கொரோனா /

கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டுக் கொண்ட பிறகும் துரைமுருகனுக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டுக் கொண்ட பிறகும் துரைமுருகனுக்கு கொரோனா பாதிப்பு

துரைமுருகன்

துரைமுருகன்

துரைமுருகன் 2 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.

  தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முன்னிட்டு திமுக பொதுச்செயலளார் துரைமுருகன் தீவிர கட்சி பணயில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் லேசான கொரோனா அறிகுறி இருந்ததையடுத்து அவர் நேற்று மருத்துவமனையில் பரிசோதனை எடுத்துக் கொண்டார்.

  பரிசோதனையின் முடிவில் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து துரைமுருகன் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்.

  துரைமுருகன் 2 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. இந்த தகவலை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலாயம் உறுதிப்படுத்தி உள்ளது.

  கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக எம்.பி கனிமொழி இன்று குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் தற்போது துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  Published by:Vijay R
  First published:

  Tags: CoronaVirus, Duraimurugan