ம.பி.யில் ஆட்சியைப் பிடிக்க கொரோனா பரவலை மத்திய அரசு மறைத்தது - தயாநிதி மாறன் குற்றச்சாட்டு

தயாநிதிமாறன்

"டிரம்ப் இந்தியா வந்த போதே இந்தியாவில் நோய் உச்சத்தில் இருந்தது"

  • Share this:
திமுக சார்பில்  ஏழை எளிய மக்களுக்கு கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் மற்றும் நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் சேகர் பாபு ஆகியோர் விநியோகித்தனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த தயாநிதி மாறன்,முதல்வர் கூட்டம் நடத்துகிறார். தலைமை செயலாளர் மத தலைவர்கள் கூட்டம் நடத்துகிறார்கள் அதற்கெல்லாம் அனுமதி இருக்கும் போது, திமுக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த மட்டும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தனி நபர் இடைவெளி பின்பற்றி நடத்தும் கூட்டத்துக்கு, ஜனநாயகத்துக்கு விரோதமாக அனுமதி மறுக்கப்பட்டள்ளது. நாங்கள் என்ன தீவிரவாத இயக்கமா? என்றார்.
மேலும், ஊரடங்கு 40 நாட்களுக்கு நீட்டிகப்பட்டு உள்ளது. எனவே, அரசு ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10,000 ரூபாய் நிதி உதவி அளிக்க வேண்டும் என்றவர், இந்தியாவில் சிறு, குறு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 80% ஊதியத்தை வழங்க வேண்டும் என்றார்.

மேலும், கொரோனா நோய் டெஸ்டிங் குறைவாக செய்யப்படுகிறது. அதை அதிகமாக செய்தால்தான் எந்த நிலையில் கொரோனா உள்ளது என்ற உண்மை தெரியும். பிரதமர் எவ்வளவு வீரவசனம் பேசினாலும், இந்தியா ஒரு ஏழை நாடுதான். மக்களிடம் பணமே இல்லாத போது மக்களிடம் நிவாரணம் கேட்கிறார்.

இலவசமாக முக கவசம் வழங்குவதை விட்டுவிட்டு முக கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிப்பது நியாயமில்லை என்றார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியியை எடுத்துக் கொண்டார்கள். மருத்துவ உபரணங்கள் கூட விநியோகிக்க இப்போது உறுப்பினர்களால் முடியாது. ஆனால், பிக்பாஸ் நடுவர் போல பிரதமர் ஒரு டாஸ்க் கொடுக்கிறார். அவர் சொல்வதை எல்லாம் சங்கியும், மங்கியும் செய்து கொண்டிருக்கின்றனர்.

அறிவிப்புகள் பெரிதாக இருக்கிறது. ஆனால் நடைமுறை பூஜ்யம்தான் என்று தெரிவித்த அவர், டிரம்ப் இந்தியா வந்த போதே இந்தியாவில் நோய் உச்சத்தில் இருந்தது .ம.பி., யில் ஆட்சியமைப்பதற்காக கொரோனா நோயை மறைத்து விட்டது மத்திய அரசு. அதற்குத்தான் இப்போது பிரதமர் மன்னிப்பு கேட்கிறார் போல, என்று தெரிவித்தார்.

Also see...











சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Published by:Vaijayanthi S
First published: