Home /News /coronavirus-latest-news /

வாலாட்டும் சண்முகங்களுக்கு... தலைமைச் செயலாளரைக் கண்டித்து முரசொலியில் கட்டுரை

வாலாட்டும் சண்முகங்களுக்கு... தலைமைச் செயலாளரைக் கண்டித்து முரசொலியில் கட்டுரை

தங்களை தலைமைச் செயலாளர் சண்முகம் தரக்குறைவாக நடத்தியதாகவும் தொலைக்காட்சியில் சப்தத்தை அதிகரித்து வைத்து தங்களின் கருத்துக்களை முறையாக உள்வாங்கவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.

ஆட்சிகள் மாறும், காட்சிகள் மாறும்... வாலாட்டிக்கொண்டிருக்கும் இன்னும் பல “சண்முகங்களின்” கணக்கும் எடுக்கப்பட்டுதான் வருகிறது என தலைமைச் செயலாளர் சண்முகத்திற்கு எச்சரிக்கைவிடுக்கும் வகையில் திமுகவின் நாளேடான முரசொலியில் கட்டுரை வெளியாகியுள்ளது.

ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்ட அரசால் செய்யக்கூடிய ஒரு லட்சத்திற்கும் அதிகமான மனுக்களை தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தை சந்தித்து அளிப்பதற்காக கடந்த புதன்கிழமை தலைமைச் செயலகத்திற்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான எம்பிக்கள் தயாநிதி மாறன், கலாநிதி, வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் நேற்று மாலை 3 மணியளவில் தலைமைச்செயலகத்துக்குச் சென்றனர்.

மனுவை அளித்துவிட்டு வெளியே செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பாலு மற்றும் தயாநிதிமாறன் தலைமைச் செயலாளர் சண்முகத்தின் மீது அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். குறிப்பாக தங்களை தலைமைச் செயலாளர் சண்முகம் தரக்குறைவாக நடத்தியதாகவும் தொலைக்காட்சியில் சப்தத்தை அதிகரித்து வைத்து தங்களின் கருத்துக்களை முறையாக உள்வாங்கவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து தலைமைச் செயலாளர் சண்முகம் நேற்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தான் அவ்வாறு நடக்கவில்லை எனவும் தவறான குற்றச்சாட்டுகளை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் இன்று "தலைக்கன செயலாளர்" எனும் தலைப்பில் தலைமைச் செயலாளர் சண்முகத்தை எச்சரித்தும் விமர்சித்தும் கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது. அதில் எடப்பாடி கூட்டத்தில் சேர்ந்து, கொழுப்பு கூடி விட்டது. தமிழ்நாட்டின் தலைக்கனச் செயலர் சண்முகத்திற்கு ஜூலையோடு பதவிகாலம் முடியவுள்ள நிலையில், பதவி நீட்டிப்பு ஆசையில் இவ்வாறு நடந்து கொள்கிறார்,

ஆட்சிகள் மாறும், காட்சிகள் மாறும் வாலாட்டிக்கொண்டிருக்கும் இன்னும் பல “சண்முகங்களின்” கணக்கும் எடுக்கப்பட்டுதான் வருகிறது என தலைமைச் செயலாளர் சண்முகத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தி.மு.க நாளேடான முரசொலியில் கட்டுரை வெளியாகியுள்ளது.

Also see...

சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Published by:Vaijayanthi S
First published:

Tags: CoronaVirus, DMK, General Secretary

அடுத்த செய்தி