தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷூக்கு கொரோனா தொற்று

தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷூக்கு கொரோனா தொற்று

எல்.கே சுதீஷ்

தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். சென்னையில் அரசு சார்பில் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து இன்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விடுத்திருந்த செய்திக்குறிப்பில், “சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள், முன் களப்பணியாளர்கள் என மொத்தம் 4 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 20 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு 2000 பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  இந்த சிறப்பு முகாமில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 முதல் 59 வயதுக்கு உட்பட்ட இணை நோய் உள்ள பொதுமக்கள் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொண்டு பயனடையலாம். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறும் எனவும் அரசால் வழங்கப்பட்ட ஏதேனும் ஓர் அடையாள அட்டையை கொண்டுவர வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ‘

  தமிழகத்தில் தேர்தல் காலம் என்பதால் பெரும்பாலான இடங்களில் மக்கள் அதிக அளவில் பிரசாரங்களுக்காக கூடுகின்றனர். பொது இடங்களுக்குச் செல்லும் போது கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என்றும் சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் அதை பெரும்பாலானோர் கடைபிடிப்பதில்லை.

  இந்நிலையில் தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது குறிப்பிடத்தக்கது.
  Published by:Sheik Hanifah
  First published: