கொரோனா: ஹோமியோபதி மருந்தை மக்களிடம் சேர்க்க கோரிக்கை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுங்கடங்காமல் அதிகரித்து வரும் நிலையில் ஆயுஷ் பரிந்துரை செய்த ஹோமியோபதி மருந்தை அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா: ஹோமியோபதி மருந்தை மக்களிடம் சேர்க்க கோரிக்கை
கோப்புப்படம்.
  • Share this:
தமிழகத்தில் சென்னையைத் தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தீயாய்ப் பரவி வருகிறது. இதற்காக தடுப்பு நடவடிக்கைகள் பல மேற்கொண்டும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது.

கொரோனா நோய்க்குத் தடுப்பு மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், கபசுர குடிநீர் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் என்பதால், பொது மக்களுக்கு அரசு மற்றும் தன்னார்வலர்கள் மூலம் விநியோகிக்கப்படுகிறது.

Also see:இந்த நிலையில் மத்திய அரசினுடைய ஆயுஷ் நிறுவனம், ஹோமியோபதி மருந்தான ஆர்சனிக் ஆல்பம் 30 என்ற மருந்தைப் பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதால், கடந்த மார்ச் மாதம் அரசாணை வெளியிட்டு மாநில அரசுகளுக்கு இந்த மருந்தைப் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாரதா கிருஷ்ணா ஹோமியோ மருத்துவக் கல்லூரி சார்பில் மக்களுக்கு இலவசமாக இம்மருந்து விநியோகிக்கப்படுகிறது. மேலும், மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் ஹோமியோ மருந்தை அதிக அளவில் அரசே கொள்முதல் செய்து மக்களிடம் சேர்க்க வேண்டும் என்று தன்னார்வலர்கள் கோரியுள்ளனர்.
First published: June 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading