• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • சீனாவில் புத்துணர்ச்சியுடன் திறக்கப்பட்ட டிஸ்னி தீம்பார்க்!

சீனாவில் புத்துணர்ச்சியுடன் திறக்கப்பட்ட டிஸ்னி தீம்பார்க்!

டிஸ்னி தீம்பார்க்

டிஸ்னி தீம்பார்க்

முழுமையான பரிசோதனை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டப் பின்னரே மக்கள் உள்ளே செல்கின்றனர்.

  • Share this:
    உலகப் பிரசித்திபெற்ற டிஸ்னிலேண்ட் தீம் பார்க் சீனாவில் திறக்கப்பட்டது. சீனாவின் முக்கியச் சுற்றுலாத்தலமாக விளங்கும் டிஸ்னிலேண்ட் திறக்கப்பட்டதன் மூலம், குழந்தைகள் உட்பட பலரும் உற்சாகமடைந்துள்ளனர்.

    சீனாவில் பிரம்மாண்ட தீம் பார்க் என அழைக்கப்படுகிறது இந்த டிஸ்னிலேண்ட் தீம் பார்க். காண்போர் இதயங்களையெல்லாம் கணப்பொழுதில் கொள்ளை கொள்ளும் கண்கவர் விளையாட்டுக்கள் இதன் சிறப்பம்சம். . குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கொண்டாட்ட மனநிலைக்கு அழைத்துச் செல்லும் அதிசயங்கள் நிரம்பிய இடம். .கொரோனா தடுப்பு நடவடிக்கையினால் , பல மாதங்களாக மூடப்பட்டிருந்த இந்த தீம் பார்க் தற்போது திறக்கப்பட்டுள்ளது.

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மக்கள் இங்கு வருவதால், வழக்கத்தை விட அதிகமான உற்சாகத்துடன் மக்கள் காணப்பட்டனர்.. குழந்தைகளுக்குப் பிடித்தமான கார்டூன், பொம்மை கதாபாத்திரங்கள் நடனமாடி,, இசை வாத்தியங்கள் முழங்க பார்வையாளர்களை வரவேற்று, அதகளப்படுத்தின. அதிசயங்கள் நிகழ்த்தி அசத்தும் தீம் பார்க்கில், பார்வையாளர்கள் வருவதே அதிசயம்தான் என்ற நிலைக்கு கொரோனா கொண்டு சென்று விட்டது.

    கொரனாவால் ஏற்பட்ட மௌனம் தற்காலிமானதுதான் என்பதை சொல்லும் விதமாக ஆரவாரம் செய்து கொண்டிருக்கிறது டிஸ்னி லேண்ட். கொரோனா பயம் சற்று ஓய்ந்திருந்தாலும், 30 விழுக்காடு பார்வையாளர்கள் மட்டுமே இங்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    முழுமையான பரிசோதனை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டப் பின்னரே மக்கள் உள்ளே செல்கின்றனர். இயற்கை ஏற்படுத்திய பேரிடரிலிருந்து மெல்ல மெல்ல மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர். பெரும் புயலுக்குப் பின் அமைதி என்பது போல், கொரோனாவின் தாக்குதலில் கட்டுண்டிருந்த மக்களுக்கு டிஸ்னி லேண்ட் திறப்பு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Also see...







    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: