• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பேடிஎம் மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் முறை அறிமுகம்

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பேடிஎம் மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் முறை அறிமுகம்

போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

அரசு பேருந்தில் பயணிக்க டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் வசதியை தமிழக போக்குவரத்து துறை அறிமுகம் செய்துள்ளது.

  • Share this:
போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ‘5669 பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட்டுள்ளதாகவும், 60% பயணிகள் மட்டுமே ஏற்றப்படுவதாகவும் தெரிவித்தார்.

நோய்ப்பரவல் தடுப்பு நடவடிக்கையாக முதல்கட்டமாக 2 பேருந்துகளில் Paytm வசதி (டிஜிட்டல் பரிவர்த்தனை) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த வசதி மூலம், QR Code பயன்படுத்தி, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தலாம். ,  Paytm இல்லாதவர்கள் பணம் கொடுத்து டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் கூறுகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை முதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், தனியார் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக ஒரு வாரத்தில் அறிவிப்புகள் வரும் என்றும் கூறினார்.

பேருந்து கட்டண உயர்வு தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், கட்டணத்தில் மாற்றமில்லை, பழைய கட்டண முறையே தொடரும் என்றும் மாதாந்திர பயண அட்டை நடைமுறையும் தொடரும் என்றார்.

போக்குவரத்து ஊழியர்களுக்குச் சம்பளம் பிடித்தம் செய்யப்படவில்லை என்று தெரிவித்த அவர், 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு வருவதால் மாணவர்களின் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படும் என்றும், பயணிப்போரின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் மக்களின் தேவைக்கேற்ப பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see:


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: