கொரோனா வைரஸ் கொடும்பாவி: வித்தியாசமாக கொண்டாடப்பட்ட ஹோலி பண்டிகை..!

மும்பையின் ஒர்லியில் கொரோனா வைரசின் கொடும்பாவி உருவப் பொம்மையை ஹோலிகாவாக சித்தரித்து எரித்து மக்கள் கொண்டாடினர்.

மும்பையின் ஒர்லியில் கொரோனா வைரசின் கொடும்பாவி உருவப் பொம்மையை ஹோலிகாவாக சித்தரித்து எரித்து மக்கள் கொண்டாடினர்.

 • Share this:
  வண்ணமயமாக ஹோலிப் பண்டிகை நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி ஹோலிகா தகன நிகழ்ச்சி விமரிசையாக நடத்தப்பட்டது.

  வசந்தகாலத்தை வரவேற்கும் விதமாக ஹோலி பண்டிகை கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் களைகட்டியுள்ளன. டெல்லி, மும்பை, கவுஹாத்தி, பாட்னா, நாக்பூர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களில் இரவு முழுவதும் ஹோலிகா தகன நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. இதனை கண்டுகளித்த திரளானோர் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

  ஹோலி பண்டிகையையொட்டி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகளை பூசியும் நடனமாடியும் உற்சாகமாகக் கொண்டாடினர்.

  மும்பையின் ஒர்லியில் கொரோனா வைரசின் கொடும்பாவி உருவப் பொம்மையை ஹோலிகாவாக சித்தரித்து எரித்து மக்கள் கொண்டாடினர்.

  குஜராத் மாநிலம் சூரத்தை அடுத்த சரஸ் என்ற கிராமத்தில் ஹோலி தகன நிகழ்ச்சியின் போது மக்கள் தீ மிதித்தனர். குஜராத்தின் ஜாம்நகரில் அரக்கனின் உருவப் பொம்மையை ஹோலிகாவாக சித்தரித்து எரித்தனர்.

  ஜம்மு-காஷ்மீரின் ரஜோரியில் உடல் முழுவதும் தாரை பூசிக் கொண்ட ஒருவர் வித்தியாசமாக ஹோலியை கொண்டாடினர். ராஜஸ்தான் மாநிலம் அஜ்மரில் நடைபெற்ற ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் வெளிநாட்டினரும் பங்கேற்று நடனமாடி அசத்தினர்.

  சித்தூர்கர் நகரில் உடல் முழுவதும் சேற்றை பூசிக் கொண்டும் ஒட்டகம், டிராக்டரிலும் பவனி வந்தும் ஹோலியை அசத்தலாக கொண்டாடினர்.

  ஜெய்ப்பூரில் வண்ணப் பொடிகளைத் தூவியும், ரோஜா பூக்கள் கொடுத்தும் ஹோலி கொண்டாட்டத்தில் திகைத்து போனார்கள்.

  மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் டால் உத்சவ் என்ற பெயரில் களைகட்டிய ஹோலிப் பண்டிகையில் சிறுவர்களும், பெரியவர்களும் நடனமாடி அசத்தினர்.

  Also see...
  Published by:Vaijayanthi S
  First published: