தற்போதைய கொரோனா தடுப்பூசிகள் டெல்டா வகைகளுக்கு எதிராக வேலை செய்யுமா?

மாதிரிப் படம்

டெல்டா பிளஸ் உருமாறிய கொரோனா வகை வைரஸுக்கு எதிராக 100% தடுப்பூசி வேலை செய்யாது என்று கூற முடியாது. ஏன் என்றால் வேரியண்ட் என்று நாம் கூறும் உருமாறிய கொரோனாக்கள் தங்கள் வடிவத்தில் ஏதாவது ஒரு சில இடங்களில் மட்டுமே மாற்றம் ஏற்பட்டிருக்கும்.

  • Share this:
டெல்டா, டெல்டா பிளஸ் போன்ற உருமாறிய கொரோனா வகைகள் பரவிவரும் நிலையில், தற்போதைய தடுப்பூசிகள் அதற்கு எதிராக செயலாற்ற போதுமானதா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலை குறைந்துவரும் நிலையில், விரைவில் மூன்றாவது அலைக்கு வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். இதனிடையே, டெல்டா, டெல்டா பிளஸ் போன்ற உருமாறிய கொரோனா வகைகளும் நாட்டில் பரவி வருகிறது.

இந்தியாவில் தற்போது செலுத்தப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி முந்தைய வகைகளுக்கு எதிராக வீரியமாக செயலாற்றும் என்று கூறப்பட்ட நிலையில்,  தற்போதைய புதிய வகைகளுக்கு எதிராக  செயலாற்ற போதுமானதாக இருக்குமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது தொடர்பாக விஞ்ஞானி த வி வெங்கடேஸ்வரனிடம்  கேட்டபோது,  டெல்டா உருமாறி கொரோனா வகை, மற்றும் டெல்டா பிளஸ் உருமாறிய கொரோனா வகை வைரஸுக்கு எதிராக 100% தடுப்பூசி வேலை செய்யாது என்று கூற முடியாது. ஏன் என்றால் வேரியண்ட் என்று நாம் கூறும் உருமாறிய கொரோனாக்கள் தங்கள் வடிவத்தில் ஏதாவது ஒரு சில இடங்களில் மட்டுமே மாற்றம் ஏற்பட்டிருக்கும்.



ஆனால் நாம் செலுத்தும் தடுப்பூசியில் அந்த வைரசின் பல்வேறு இடங்களை எதிர்கொள்ளும் வகையில் எதிர்ப்பு சக்தி உருவாகும். எனவே ஒரு புதிய மாற்றம் வந்ததனாலேயே தடுப்பூசி வேலை செய்யாது என கூற முடியாது. அப்படி நிகழ வைரசில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். அப்படி மாறியிருந்தால் நாம் அதனை இந்நேரம் உருமாறிய கொரோனா என்று அழைக்க மாட்டோம். புது வைரஸ் என்று அழைத்திருப்போம். எனினும் மூன்றாவது டோஸ் போடுவதால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறதா என்பது குறித்த் ஆய்வு நடைபெற்று வருகிறது’ என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: மன அழுத்தம் குறைக்கும் பெண்கள் நட்பு: புதிய ஆய்வின் அதிகாரப்பூர்வமான தகவல்!


டெல்டா உருமாறிய கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி வேலை செய்யுமா என்று ஐ சி எம் ஆர் நடத்திய ஆய்வின் முதல் கட்ட முடிவுகள் படி 16% மாதிரிகளில் எதிர்ப்பு சக்தி காணப்படவில்லை. இது குறித்து வைராலஜிஸ்ட் ஜேக்கப் ஜான்  கூறுகையில், ’டெல்டா உருமாறிய கொரோனாவுக்கு எதிராக 84% மாதிரிகளில் எதிர்ப்பு சக்தி இருப்பதனால் தடுப்பூசி வேலை செய்யும் என்று தான் அர்த்தம். 16% மாதிரிகளில் மிக குறைந்த அளவில் எதிர்ப்பு சக்தி இருந்திருக்கலாம். அது இந்த சோதனையில் தெரியாமல் இருந்திருக்கலாம்.

மேலும் படிக்க: ஓடாத மீட்டருக்கு ரூ.73 ஆயிரம் கட்டணம்.. நுகர்வோர் அதிர்ச்சி..

தடுப்பூசிகள் பொருத்தவரை, எந்தவொரு தடுப்பூசியை இரண்டு டோஸ் எடுத்து கொண்ட நபர்கள் 95% இறப்பு மற்றும் தீவிர பாதிப்பிலிருந்து காப்பாற்றப்படுவர். இது டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் உருமாறிய கொரோனாவுக்கும் பொருந்தும். மூன்றாவது டோஸ் கொடுத்தால் கண்டிப்பாக எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்’ என்று தெரிவித்தார்.

 
Published by:Murugesh M
First published: