கொரோனா பரவலுக்கும் எனக்கும் தொடர்பா? - பில்கேட்ஸ் விளக்கம்

கொரோனா கிருமித் தொற்றை தான் உருவாக்கியதாகப் பரவி வரும் தகவல்களை மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மறுத்துள்ளார்.

கொரோனா பரவலுக்கும் எனக்கும் தொடர்பா? - பில்கேட்ஸ் விளக்கம்
பில்கேட்ஸ்
  • Share this:
கொரோனா வைரஸ் பரவலுக்கும், பில்கேட்ஸுக்கும் தொடர்பு இருப்பதாகவும், கொரோனா தடுப்பு மருந்தை விற்பனை செய்வதன் மூலம் பெரும் தொகையை அவர் சம்பாதிக்க முனைவதாகவும் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின.

உலக மக்கள் தொகையில் 15 சதவீதத்தை அழிக்க பில்கேட்ஸ் விரும்புவதாக ஒரு காணொலி ஒன்று குற்றம் சாட்டியிருந்தது. உயிரியல் தீவிரவாதத் திட்டம் ஒன்றை உருவாக்கியதற்காக பில்கேட்ஸ் ஒருமுறை கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் பரவின.

Also read: உலகளவில் 7 லட்சத்தை நெருங்கியது கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை


இதுகுறித்து பேசிய பில்கேட்ஸ், நெருக்கடியான கிருமித்தொற்று சூழல், அதற்கான எளிய விளக்கத்தை தேடும் மக்கள், சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றின் ஆபத்தான கலவையே இந்த வதந்திகள் என்று குறிப்பிட்டார். உலக அளவில் தடுப்பு மருந்துகளுக்காக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையே அதிக நிதி வழங்கியுள்ளது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
First published: July 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading