Home /News /coronavirus-latest-news /

சென்னை காவல்துறையினரிடம் ஆட்டோகிராப் வாங்கிய நடிகர் சூரி!

சென்னை காவல்துறையினரிடம் ஆட்டோகிராப் வாங்கிய நடிகர் சூரி!

நிஜத்தில் காவல் துறையினர், மருத்துவர்கள், தீயனைப்பு வீரர்கள், செவிலியர்கள் தூய்மைப் பணியாளர்கள், பத்திரிகை நண்பர்கள் ஆகிய நீங்கள்தான் உண்மையான கதாநாயகர்கள் என்றார்.

நிஜத்தில் காவல் துறையினர், மருத்துவர்கள், தீயனைப்பு வீரர்கள், செவிலியர்கள் தூய்மைப் பணியாளர்கள், பத்திரிகை நண்பர்கள் ஆகிய நீங்கள்தான் உண்மையான கதாநாயகர்கள் என்றார்.

நிஜத்தில் காவல் துறையினர், மருத்துவர்கள், தீயனைப்பு வீரர்கள், செவிலியர்கள் தூய்மைப் பணியாளர்கள், பத்திரிகை நண்பர்கள் ஆகிய நீங்கள்தான் உண்மையான கதாநாயகர்கள் என்றார்.

கொரோனா வைரஸ் பரவலிலிருந்து மக்களைக் காக்கும் காவல் துறையினருக்கு நன்றி சொல்ல நடிகர் சூரி இன்று திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள D1 காவல் நிலையத்திற்கு வருகை தந்திருந்தார்.

அப்போது அவர் கூறியதாவது, கொரோனா வைரஸ் பரவலால் உலகமே பயந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், அதன் பரவலிலிருந்து நமது உயிரைப் பாதுகாக்கும் விதிமுறைகளை தினந்தோறும் கூறி மக்களைக் காப்பதில் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டவர்கள் காவல் துறையினர். தங்களது உயிரையும் பெரிதென்று எண்ணாமல், இரவு பகல் பாராமல், 24 மணி நேரமும் நம் உயிர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வழிநடத்திய அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் என்றார்.

தனது ஊரில் அய்யனார் சாமிதான் எல்லைச் சாமி, அது போல் தற்போது காக்கிச் சட்டை போட்ட எல்லைச் சாமிபோல் காவல் துறையினர் நம்மைக் காத்து வருகின்றனர். மேலும் கூறுகையில், கடவுளை அன்றாடம் வணங்கும் நாம் அனைவரும், சமீப காலங்களாக காவல் துறையினரையும் வணங்க ஆரம்பித்து விட்டோம். ஆனால் இந்த கொரோனாவை காவல்துறையைச் சார்ந்த நண்பர்களையும் விட்டு வைக்கவில்லை. இதுவரை 60 காவல் துறையினர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றார். அவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்வதாகவும் கூறினார்.

சினிமாவில்தான் நாங்கள் கதாநாயகர்கள், ஆனால் நிஜத்தில் காவல் துறையினர், மருத்துவர்கள், தீயனைப்பு வீரர்கள், செவிலியர்கள் தூய்மைப் பணியாளர்கள், பத்திரிகை நண்பர்கள் ஆகிய நீங்கள்தான் உண்மையான கதாநாயகர்கள் என்றார் சூரி. இவர்களைச் சந்தித்து நன்றி கூறி, அவர்களிடம் ஆட்டோகிராப் வாங்கியதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன் என்றும் இந்த நாள் என் வாழ்நாளில் மிக முக்கியமான நாள் என்றும் கூறினார். மேலும், இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு என்றென்றும் எனது மனதில் நிலைத்திருக்கும். நாம் அனைவரும் பாதுகாப்பாக இருப்போம், நம்மைப் பாதுகாப்பவர்களுக்குத் துணை நிற்போம் என்று நடிகர் சூரி தெரிவித்தார்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see:
Published by:Rizwan
First published:

Tags: Actor Soori, Chennai Police, Lockdown

அடுத்த செய்தி