கொரோனா தொற்று நோயின் கவனிக்கப்படாத அறிகுறி என்ன? அலட்சியம் காட்டாமல் கவனியுங்கள்..

பொது இடங்களில் செல்வதற்கு காய்ச்சல் இருக்கிறதா என்ற அளவுகோலாக பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது வயிற்றுப்போக்குடன் வரும் நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. 

கொரோனா தொற்று நோயின் கவனிக்கப்படாத அறிகுறி என்ன? அலட்சியம் காட்டாமல் கவனியுங்கள்..
கோவிட் 19
  • Share this:
கொரோனா நோயின் முதல் அறிகுறிகளாக இது வரை சளி, இருமல், காய்ச்சல் இவை தான் இருந்தன. பொது இடங்களில் செல்வதற்கு காய்ச்சல் இருக்கிறதா என்ற அளவுகோலாக பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது வயிற்றுப்போக்குடன் வரும் நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது.

கொரோனா வைரஸ் உடலில் நுரையீரல், சுவாச பாதையை தாக்குவதால் மூச்சு திணறல், சளி, இருமல் போன்றவை இந்நோயின் அறிகுறிகளாக கூறப்பட்டன. ஆனால் இந்த வைரஸ் சிலரது உடம்பில் சுவாச பாதைக்கு பதிலாக குடல் மற்றும் வயிற்றுப் பகுதியை முதலில் தாக்குகிறது. எனவே மூச்சு திணறல் போன்ற அறிகுறிகள் வருவதற்கு முன்பாகவே வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

48 மணி நேரத்துக்கு தொடர்ந்து வயிற்றுப்போக்கு இருந்தால், அது  ஏற்படுவதற்கு கெட்டுப்போன உணவு அல்லது வேறு காரணங்கள் என்று அலட்சியமாக இருந்துவிடக் கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மனித கழிவில் மூன்று மாதங்கள் வரை கொரோனா வைரஸ் இருக்கலாம் என ஆய்வுகள் கூறுவதால்,  தனிமைப்படுத்துதல் அவசியம்.


ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருந்தியல் துறை தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், “கடுமையான வயிற்றுப்போக்கு மட்டுமே அறிகுறியாக கொண்ட நோயாளிகளை பார்க்கிறோம். வயிற்றுப் போக்குடன் சேர்ந்து சில சமயம் வாந்தி, பசி எடுக்காததும் அறிகுறிகளாக உள்ளன. கொரோனா வைரஸ்கான ரிசப்டார் என சொல்லக்கூடிய அந்த வைரஸை உடலில் ஏந்தி கொள்வதற்கு ஏதுவான செல்கள் நுரையீரலில் மட்டுமல்லாது வயிறு, குடல் பகுதிகளிலும் இருப்பதால் பாதிப்பு அங்கு தெரிய தொடங்குகிறது. எனவே காய்ச்சல், சளி ஆகிய அறிகுறிகள் மட்டுமல்லாமல் மற்ற பாதிப்புகள் ஏற்பட தொடங்கும் போதும் கவனமாக இருக்க வேண்டும்” என்கிறார்.கடந்த மாதம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வயிற்றுப்போக்கை கொரோனாவின் அறிகுறியாக சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
First published: July 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading