டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் 7 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு..!

டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் 7 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு..!
டைமன்ட் பிரின்சஸ் கப்பலில் 7 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு
  • News18 Tamil
  • Last Updated: February 20, 2020, 10:02 AM IST
  • Share this:
டைமன்ட் பிரின்சஸ் கப்பலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஊஹானில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்காக ராணுவ விமானம் இன்று சீனா செல்கிறது.

சீனாவின் ஊஹான் நகரில் ஏற்பட்ட கொரோனா வைரஸ், ஜப்பான், இந்தியா உட்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் தற்போது பரவியுள்ளது. இதில், ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் சென்ற டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் உள்ள சில பயணிகளுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டது.

இதையடுத்து, யோகோஹாமா துறைமுகத்தில் அந்த கப்பல் நிறுத்தப்பட்டு, கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.


இந்நிலையில், இந்த கப்பலில் உள்ளவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மேலும் 88 பேருக்கு கொரோனா தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் ஒருவர் இந்தியர் என்றும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் 7 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 542 ஆகியுள்ளது. இதனிடையே, ஊஹானில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்காக ராணுவ விமானம் இன்று சீனா செல்கிறது.

C-17 குளோப்மாஸ்டர் (Globemaster) ரகத்தைச் சேர்ந்த இந்த விமானத்தில் மருந்து பொருட்களும் எடுத்துச் செல்லப்படுகின்றன. மீண்டும் திரும்பி வரும்போது ஊஹானில் உள்ள இந்தியர்கள் அழைத்து வரப்படவுள்ளனர்.ஏற்கனவே, இந்த மாதத் தொடக்கத்தில் 2 ஏர் இந்திய விமானங்கள் மூலம் ஊஹானில் இருந்து 640 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டு, மானேசர் மற்றும் இந்தோ திபெத் போலீஸ் படையின் மருத்துவமனையில் அவர்களை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், 14 நாட்கள் பரிசோதனைக்கு பின் அவர்களில் 406 பேர் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
First published: February 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்