100 கொரோனா நோயாளிகளுக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிறப்பு டயாலிசிஸ் சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட்டு கொரானா நோயாளிகள் நூற்றுக்கும் அதிகமானோர் பலன் பெற்றுள்ளனர்.

100 கொரோனா நோயாளிகளுக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ்
ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை.
  • Share this:
கொரோனா நோய் தொற்றுக்கு ஆளான சிறுநீரக கோளாறு கொண்ட நபருக்கு டயாலிசிஸ் சிகிச்சையும் நோய் தொற்று சிகிச்சையும் இணைத்து வழங்கப்பட வேண்டும். இதற்காக தனியான டயாலிசிஸ் ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியம்.

சிறப்பு டயாலிசிஸ் பிரிவு மருத்துவர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், "இந்த வசதி செய்ய முடியாத பல்வேறு மருத்துவமனைகளில் நோயாளிகளை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். சில மருத்துவமனைகளில் வசதி இருந்தாலும் கொரோனா நோயாளி இருந்தால் மற்ற நோயாளிகள் வர மாட்டார்கள் என சிகிச்சை அளிப்பதில்லை. எங்கள் மருத்துவமனைக்கு வந்துவிட்டால் யாருக்கும் சிகிச்சை மறுப்பதில்லை.

இவர்களுக்கு நோய் குணமாகும் வரையில் தொடர்ந்து சிகிச்சை வழங்க சிறப்பு ஏற்பாடு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் செய்யப்பட்டிருக்கிறது. 10 டயாலிசிஸ் கருவிகள் இதற்காக தனியாக உள்ளன.


Also see:

இதுவரை 100 கொரோனா தொற்றாளர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டயாலிசிஸ் முடியும்வரை அதாவது ஐந்து மணி நேரம் தொடர்ந்து முழு கவச உடை அணிந்து பணி செய்ய வேண்டிய சூழல் உள்ளது. மருத்துவர்கள் தேவைப்பட்டால் இடையில் இளைப்பாறிக் கொள்ளலாம். அதன் பின் கவச உடையை மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கான வசதியை மருத்துவமனை நிர்வாகம் தருகிறது. டயாலிசிஸ் இல்லாமல் ஒரு நோயாளி கூட பாதிக்கப்படவில்லை. பொது சுகாதார கட்டமைப்பின் பலமாக இதை பார்க்கிறோம். இள வயதில் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் எங்கள் குழுவினரால் தான் இது சாத்தியமானது" என்று தெரிவித்தார்.17 முதுநிலை மருத்துவர்கள், 12 இளநிலை மருத்துவ தொழில்நுட்பவியலாளர்கள் கொண்ட மருத்துவக் குழு இந்தப் பணியை முன்நின்று செய்து வருகின்றனர். சிறுநீரக கோளாறுடன் கொரோனா நோய்த்தொற்றும் பெற்று சிகிச்சைக்கு வந்த நோயாளிகளில் 8 பேர் மட்டுமே மரணம் அடைந்திருக்கிறார்கள்.

First published: June 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading