உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான தோனி ₹1 லட்சம் நிதி... நெட்டிசன்கள் விளாசல்

உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான தோனி ₹1 லட்சம் நிதி... நெட்டிசன்கள் விளாசல்
மகேந்திர சிங் தோனி
  • Share this:
கொரேனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி கொடுத்த கிரிக்கெட் வீரர் தோனியை பலர் விமர்சித்து வருகின்றனர்.

உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு பின் இந்திய அணியில் தோனி இடம்பெறவில்லை. ஆனால் தோனி எப்போது மீண்டும் இந்திய அணியில் இடம்பெறுவார் என்று ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஐ.பி.எல் தொடர் உள்ளிட்ட அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.


கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அதிக நிதி தேவைப்படுவதால் பொதுமக்கள், பிரபலங்கள் பலர் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர்.

தடங்கள வீராங்கனை ஹீமா தாஸ் தன்னுடைய ஒரு மாத சம்பளத்தையும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 50 லட்ச ரூபாயும் நிவாரண நிதியாக கொடுத்துள்ளனர். சௌராஸ்டிரா கிரிக்கெட் சங்கம் 21 லட்சம ரூபாய் நிதி உதவி  கொடுத்துள்ளது.

இதற்கிடையே இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி புனேவை சேர்ந்த தன்னர்வ தொண்டு நிறுவனம் மூலம் 1 லட்சம் ரூபாய் நிதி கொடுத்து உள்ள தகவல் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.பன்னிரென்டாம் வகுப்பு மாணவர் 2.5 லட்சம் ரூபாய் பிரதமர் நிவாரணத்தின் கீழ் கொடுத்துள்ள நிலையில் உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான தோனி 1 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளது அவர் மீதான விமர்சனத்தை அதிகரித்துள்ளது.

மேலும் தோனி ரசிகர்கள் சிலர் அவர் தன்னர்வ தொண்டு நிறுவனத்திற்கே ஒரு லட்சம் ரூபாய் நிதி கொடுத்தார் பிரதமர் நிவாரணத்திற்கு அவர் வழங்கவில்லை என்று தோனிக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: March 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading