கொரோனாவை கட்டுப்படுத்த 'தன்வந்த்ரி ரதம்' - குஜராத் அரசின் முயற்சிக்கு குவியும் பாராட்டு
Dhanvantri Rath | கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த குஜராத் அரசு 'தன்வந்த்ரி ரதம்' என்ற நடமாடும் மருத்துவ வாகன சேவை பாராட்டை பெற்றுள்ளது.

தன்வந்த்ரி ரதம் - நடமாடும் மருத்துவ வாகனம்
- News18 Tamil
- Last Updated: May 28, 2020, 1:14 PM IST
குஜராத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தன்வந்த்ரி ரதம் எனும் நடமாடும் மருத்துவ வாகனத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. ஒவ்வொரு வாகனத்திலும் உள்ள மருத்துவர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் சோதனை மேற்கொள்வார்கள்.
முதற்கட்டமாக 50 நடமாடும் மருத்துவ வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகம் உள்ள 14 பகுதிகளில் 200 இடங்களில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு இடத்திலும் 2 மணி நேரம் காத்திருந்து மக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
உடலின் வெப்பநிலை, சுவாசக் கோளாறுகள் அனைத்து பரிசோதனை மேற்கொள்ளப்படும். மக்களுக்கு தேவையான மாத்திரை மற்றும் சித்த மருத்தும் இந்த தன்வந்த்திரி ரதம் மூலமாக கொடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் 85 தன்வந்த்ரி ரதம் அதிகரிக்கப்பட்டு 336 பகுதிகளில் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரை இந்த தன்வந்த்ரி ரதம் நடமாடும் மருத்துவ வாகனம் மூலமாக 71,00 பேர் பயனடைந்துள்ளனர். அரசின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
முதற்கட்டமாக 50 நடமாடும் மருத்துவ வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகம் உள்ள 14 பகுதிகளில் 200 இடங்களில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு இடத்திலும் 2 மணி நேரம் காத்திருந்து மக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
உடலின் வெப்பநிலை, சுவாசக் கோளாறுகள் அனைத்து பரிசோதனை மேற்கொள்ளப்படும். மக்களுக்கு தேவையான மாத்திரை மற்றும் சித்த மருத்தும் இந்த தன்வந்த்திரி ரதம் மூலமாக கொடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் 85 தன்வந்த்ரி ரதம் அதிகரிக்கப்பட்டு 336 பகுதிகளில் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.