உங்கள் மாவட்டத்தைத் தேர்வுசெய்க

  Home /News /coronavirus-latest-news /

  இந்தியாவில் ₹ 10 விலையில் கொரோனா உயிர் காக்கும் மருந்து

  இந்தியாவில் ₹ 10 விலையில் கொரோனா உயிர் காக்கும் மருந்து

  டெக்ஸாமெதாசோன்

  டெக்ஸாமெதாசோன்

  தீவிர நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வெண்ட்டிலேட்டர் உதவியுடன் இருக்கும் 5 பேரில் மூவர் இம்மருந்தால் உயிர் பிழைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
   கொரோனா பாதித்து வெண்டிலேட்டரில் இருப்பவர்களுக்கு உயிர் காக்கும் மருந்தாக டெக்ஸாமெதசோன் இருக்கும் என்றூ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

   ஆர்த்ரிட்டிஸ் போன்ற நோய்களில் வீக்கத்தைக் குறைக்கவும், கொரோனா நோய்த்தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் காத்து மரண விகிதத்தைக் குறைக்கவும் உதவுவதாக சோதனை முடிவுகள் தெரிவித்துள்ளன. தீவிரமான பாதிப்புடைய நோயாளிகளுக்கு இவை உடனடியாக அளிக்கப்பட வேண்டும் எனவும் இதுவரையிலான ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

   டெக்ஸமெதசோன்


   வெண்ட்டிலேட்டர்களில், ஆக்சிஜன் சப்போர்ட் கிடைக்க வேண்டிய சுவாச பாதிப்பின்போது அளிக்கப்படும் இம்மருந்து உயிர் காக்கும் மருந்தாக செயல்படுவதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். 4,31,000 பேரைவிட அதிகமானவர்களைக் கொன்றிருக்கும் இந்த வைரஸ் பாதிப்பின் தீவிரத்தை உடனடியாக குறைக்க இம்மருந்து பயன்படுவதாக இங்கிலாந்து முதன்மை மருத்துவ அலுவலர் க்றிஸ் விட்டி தெரிவித்துள்ளார்.

   டெக்ஸமெதசோன்


   தீவிர நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வெண்ட்டிலேட்டர் உதவியுடன் இருக்கும் 5 பேரில் மூவர் இம்மருந்தால் உயிர் பிழைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

   மேலும், பிரிட்டனில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கிய காலத்தில் இருந்தே இந்த மருந்தைப் பயன்படுத்தியிருந்தால் 5 ஆயிரம் உயிர்களைப் பாதுகாத்திருக்க முடியும். கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு இந்த மருந்து மிகவும் உதவும் என்று வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.

   டெக்ஸமெதசோன்


   கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள ஏழை நாடுகளுக்கு இந்த மருந்து மிகவும் உதவிகரமாக இருக்கும். மனித உடலின் நோய் எதிர்ப்பு கொரோனா நோயை எதிர்த்து போரிடும் போது உடல் உறுப்புகளுக்கு ஏற்படும் சேதத்தை குணப்படுத்த இந்த டெக்ஸமெத்தசோன் பயன்படுகிறது.

   உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானிகளில் ஒருவரான செளமியா சுவாமிநாதன், உயிர் காக்கும் மருந்தாக ஆய்வுகளில் கண்டறியப்பட்ட டெக்ஸமெதசோன் மிகவும் நம்பிக்கையூட்டுவதாகத் தெரிவித்திருக்கிறார்.

   எனினும், லேசான கொரோனா தொற்று ஏற்பட்டு பெரிதாக பாதிப்பு இல்லாதவர்களுக்கு இந்த மருந்தால் எந்த பயனும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   இந்தியாவில் பல மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் டெக்ஸாமெதசோன்-ஐ தயாரிப்பதால் ரூ.10 விலையில், 10 மில்லி மருந்து கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    
   Published by:Sankar
   First published:

   Tags: CoronaVirus

   அடுத்த செய்தி