COVID-19 crisis in India | இந்திய மக்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம்; கொரோனா கஷ்ட காலத்தில் இந்திய மக்களுக்கு உதவத் தயார்- ஜோ பைடன், கமலா ஹாரிஸ் உறுதி

COVID-19 crisis in India | இந்திய மக்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம்; கொரோனா கஷ்ட காலத்தில் இந்திய மக்களுக்கு உதவத் தயார்- ஜோ பைடன், கமலா ஹாரிஸ் உறுதி

கமலா-ஜோ பிடன்

கொரோனா இரண்டாம் அலையில் இந்தியா ஆக்சிஜன் சப்ளை தட்டுப்பாட்டினால் திக்குமுக்காடி வரும் நிலையிலும், மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்கள், படுக்கை வசதி இன்மை நிலையிலும் இந்திய மக்களுக்கு உதவ முன்வருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் உறுதியளித்துள்ளனர்.

  • Share this:

    ஜோ பைடன் தன் ட்வீட்டில், “கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பக் காலத்தில் இந்தியா எங்கள் மருத்துவமனைகளுக்கு உதவி அனுப்பியது. இப்போது இந்திய மக்கள் கஷ்டப்படும்போது அமெரிக்கா உதவ உறுதியாக உள்ளது” என்று கூறியுள்ளார். டெலாவரில் தன் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட்டு வரும் அதிபர் ஜோ பைடன், இந்தியாவின் நிலைமைகளி நெருக்கமாக அவதானிப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    அதே போல் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தன் ட்விட்டர் பக்கத்தில், “இந்திய அரசுடன் அமெரிக்கா நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது, கோவிட் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த கூடுதல் உதவிகளை அவசரமாக அனுப்ப உறுதிபூண்டுள்ளோம். உதவியை அளித்தாலும் இந்திய மக்களுக்காக, அயராது பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

    சமீபத்திய கோவிட் பெருந்தொற்று இரண்டாம் அலை பரவலுக்குப் பிறகு அமெரிக்கா அதிபர், துணை அதிபர் தரப்பிலிருந்து முதல் பதிவு வெளியாகியுள்ளது. இருவர் மீதும் அமெரிக்காவில் உள்ள இந்திய நண்பர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர். ஜனநாயகக் கட்சிக்குள்ளேயே விமர்சனங்கள் எழுந்தன. அதாவது நட்பு நாடான இந்தியாவுக்கு உதவுவதில் ஏன் இத்தனை மந்தம் என்று விமர்சனங்கள் அங்கு எழுந்தன.

    அரசு உதவி செயலர் வெண்டி ஷெர்மன் கூறும்போது, “இந்தியாவில் உள்ள நண்பர்களுக்காக அமெரிக்க மக்கள் பிரார்த்திக்கின்றனர். சிகிச்சைக்கான மருந்துப் பொருட்கள், வெண்டிலேட்டர்கள், பிபிஇ கவச உடைகள், வாக்சினுக்கான இடுபொருட்கள் ஆகியவற்றை அவசரமாக அனுப்பி வருகிறோம்” என்றார்.

    அமெரிக்காவின் இந்த திடீர் அவசர உதவிகளுக்கு அங்குள்ள இந்திய சமூகத்தினர் பைடன், கமலா ஹாரிஸுக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

    இந்தியாவில் பரவி வரும் இரண்டாம் அலை புதிய கொரோனா ஸ்ட்ரெய்ன் ஆகியவை உலகிற்கே பெரிய அச்சுறுத்தல் இந்நிலையில் இந்தியாவில் இதனைக் கட்டுப்படுத்துவது உலக சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமெரிக்கா கருதுகிறது.

    இதனையடுத்து  இந்தியாவுக்கு மருத்துவ சப்ளைகள், தடுப்பூசி இடுபொருட்கள், உற்பத்தி பொருட்கள் இன்னபிற உதவிகளை செய்ய அமெரிக்கா தொடங்கியுள்ளது.
    Published by:Muthukumar
    First published: