தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் & தனிமைப்படுத்தப்பட்டவர்கள் விபரங்கள்...!

நெல்லை, திருச்சி, வேலூர், அரியலூரில் தலா ஒருவருக்கு கொரொனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் & தனிமைப்படுத்தப்பட்டவர்கள் விபரங்கள்...!
கோப்பு படம்
  • Share this:
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38-ஐ தாண்டியுள்ள நிலையில், இதுவரை வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் நெருக்கத்தில் இருந்தவர்களுக்கே தொற்று பரவியுள்ளது.

தொற்றுடன் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலமாக 10 பேருக்கு கொரோனா பரவியுள்ளது தெரியவந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர், தனிமைப்படுத்தப்பட்டோர் குறித்த விவரங்களை அறிந்துகொள்வோம்.

ஓமனில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பிய என்ஜீனியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அடுத்ததாக டெல்லியில் இருந்து வேலைதேடி சென்னை வந்த 25 வயது இளைஞருக்கு தொற்று ஏற்பட்டது. இவருடன் நெருக்கமாக இருந்த நண்பர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தபோது, 18 வயதுடைய இளைஞருக்கும் தொற்று பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களோடு தொடர்புடைய 42 பேர் தற்போதும் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.


இதேபோல், அபுதாபியில் இருந்து வந்த 21 வயதான இளைஞருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

லண்டனில் இருந்து சென்னை திரும்பிய சைதாப்பேட்டையைச் சேர்ந்த இளைஞருக்கு தொற்று உறுதியாகியிருந்த நிலையில், அவரோடு தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களில் 55 மற்றும் 65 வயதான இரு பெண்களுக்கும் தொற்று பரவியது தெரியவந்தது. அதோடு, அவர்களோடு தொடர்பில் இருந்ததாக 18 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் இருந்து சென்னை திரும்பிய 25 வயதான இளம்பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கீழ்கட்டளையைச் சேர்ந்த இவர், சென்னை திரும்பிய பிறகு மேடவாக்கத்தில் உள்ள தமது பெற்றோர் வீட்டிற்கும் சென்றிருக்கிறார். இதனால் பெற்றோர், உறவினர் என மொத்தம் 41 பேர் அவரோடு தொடர்பில் இருந்ததாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.Also read: கொரோனா பாதித்த சென்னை இளைஞர் குணமாகி வீடு திரும்பினார்...!

அமெரிக்காவில் இருந்து வந்த 52 வயதான பெண்ணுக்கும் தொற்று உறுதிப்பட்டுத்தப்பட்டுள்ளது. அதோடு அவர் மூலமாக மற்றொரு நபர் ஒருவருக்குப் தொற்று பரவியுள்ளது. இந்த பெண் அமெரிக்காவில் இருந்து லண்டன் சென்று, அங்கிருந்து சென்னைக்கு வந்துள்ளார்.

அமெரிக்காவில் இருந்து வந்த போரூரைச் சேர்ந்த 74 வயதான முதியோரும் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூர் வழியாக சென்னை வந்தவர். தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள 64 வயதான பெண் ஒருவரும் அமெரிக்காவில் இருந்து வந்தவர்.

தொற்று உறுதியான நியூசிலாந்தில் இருந்து சென்னை திரும்பிய கோட்டூர்புரத்தைச் சேர்ந்த 65 வயதான முதியவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவருக்கு இரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட வேறுசில பிரச்னைகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவருடன் தொடர்பில் இருந்ததாக 77 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

இதே வயதுடைய நபரும் நியூசிலாந்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக சென்னை திரும்பியவர். அவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லண்டனில் இருந்து வந்த 25 வயதுடைய இரண்டு இளைஞர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லண்டனில் இருந்து பெங்களூரு வழியாக சென்னை திரும்பிய இவர்களோடு தொடர்பில் இருந்ததாக 51 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

சென்னையைத் தவிர்த்து அதிகபட்சமாக சேலத்தில் 5 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 4 பேர் இந்தோனேசியாவில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் 4 பேரும், ஒரு சுற்றுலா வழிகாட்டியும் ஆவார். இவர்கள் இந்தோனேசியாவில் இருந்து டெல்லி வந்து, அங்கிருந்து சேலம் வந்தவர்கள்.

Also read: மோடியின் தொகுதியில் உணவின்றி குழந்தைகள் புல்லைச் சாப்பிட நேர்ந்த அவலம்!

தாய்லாந்தில் இருந்து ஈரோட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் இருவருக்கு தொற்று உறுதியான நிலையில், அவர்கள் மூலம் உள்ளூர்வாசிகள் மூவருக்கும் பரவியது தெரியவந்துள்ளது. இவர்களோடு தொடர்பில் இருந்ததாக 33 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 55 வயதானவர் உயிரிழந்தார். தமிழகத்தில் கொரோனாவால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இதுவாகும். வெளிநாட்டிற்குச் செல்லாத, வெளிநாட்டினருடன் தொடர்பில்லாத இவர் மூலம், அவரது குடும்பத்தினர் இருவருக்கும் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கோவையில் ஸ்பெயின் மாணவி ஒருவருக்கு நோய் தொற்று உறுதியான நிலையில், அவர் ஸ்பெயினில் இருந்து பெங்களூரு வழியாக கோவை வந்தததாகக் கூறப்படுகிறது. அதோடு, லண்டனில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த திருப்பூரைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரோடு தொடர்பில் இருந்ததாக 185 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

இதைத் தவிர்த்து நெல்லை, திருச்சி, வேலூர், அரியலூரில் தலா ஒருவருக்கு கொரொனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மொத்தமாக தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 35ஐ தாண்டியுள்ளது. ஏற்கெனவே கொரோனா தொற்றுடன் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலம், மொத்தமாக 9 பேருக்கு தொற்று பரவியிருப்பதும் தெரியவந்துள்ளது.


இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Also see:
First published: March 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading