இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிப்பு? நாளை வெளியாகிறது பரிசோதனை முடிவுகள்

இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிப்பு? நாளை வெளியாகிறது பரிசோதனை முடிவுகள்

மாதிரி படம்

உருமாறிய கொரோனா பாதிப்பு உள்ளதா என்பது பற்றிய ஆய்வின் முடிவுகள் நள்ளிரவு அல்லது நாளை வெளியாகும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.

 • Share this:
  பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களுக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உள்ளதா என்பது பற்றிய ஆய்வின் முடிவுகள் இன்று நள்ளிரவு அல்லது நாளை வெளியாகும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.

  பிரிட்டனிலிருந்து இந்தியா வந்தவர்களுக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உள்ளதா என்பது குறித்து ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி, இங்கிலாந்தில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர்களுள், நோய் பாதிப்பு இருப்பவர்களின் சளி மாதிரி புனேவுக்கு அனுப்பப்பட்டிருந்தது. இதே போல நாடு முழுவதிலும் இது குறித்த ஆராய்சிகள் மேற்கெள்ளப்பட்டு வருகின்றன. அதன் முடிவுகள் விரையில் வெளியாக இருக்கின்றன.

  இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இங்கிலாந்தில் இருநது தமிழகம் வந்த13 பேர் மற்றும், தொடர்பில் இருந்த 15 பேர் என மொத்தம் 28 பேருக்கு கண்டறியப்பட்டு இருப்பதாகவும், அவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட சளி மாதிரிகள் புனேவுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், அந்த மாதிரிகளின் முடிவுகளை மத்திய அரசு வெளியிடும் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: