Home /News /coronavirus-latest-news /

தமிழக வாகனங்களுக்கு கர்நாடகாவில் அனுமதி மறுப்பு!

தமிழக வாகனங்களுக்கு கர்நாடகாவில் அனுமதி மறுப்பு!

கோப்புப்படம்

கோப்புப்படம்

தமிழகத்தில் இருந்து வருவோரை 14 நாட்கள் தனிமைப்படுத்த திட்டம்

    தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் இருமாநில எல்லையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் காத்திருந்தன.

    அண்டை மாநிலமான கர்நாடகாவிற்கு சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுடன் தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.

    இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் இருந்து வருவோரை எல்லையில், 14 நாட்கள் தனிமைப்படுத்த கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாகவும், தனிமைப்படுத்துதலுக்கு ஒப்புதல் அளிக்கும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என கர்நாடக காவல்துறை தெரிவித்துள்ளது.

    மேலும் மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்ய வழங்கப்பட்ட இ பாஸ் மே 9 முதல் வழங்கப்படாது எனவும் காவல்துறை அறிவித்துள்ளது. இதனால், எல்லைப் பகுதியில் வாகனங்கள் காத்துக்கிடந்தன.

    Also see...






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: CoronaVirus, Lockdown

    அடுத்த செய்தி