இங்கிலாந்தில் டெல்டா வைரஸ் பாதிப்பு இரட்டிப்பு வேகத்தில் அதிகரித்து வருவது இம்பீரியல் கல்லூரி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ், நாளுக்கு நாள் உருமாறிக் கொண்டே செல்வது மக்களை மட்டுமின்றி மருத்துவ உலக நிபுணர்களையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை பல்வேறு வகையான கொரோனா வைரஸின் உருமாறிய வடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், டெல்டா வைரஸ் என்ற திரிபை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வைரஸ், தற்போது உலக நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. இங்கிலாந்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்ததால் ஜூன் 19 ஆம் தேதியுடன் ஊரடங்கு விதிகளை நீக்குவதற்கு அந்நாட்டு பிரதமர் போரீஸ் ஜான்சன் முடிவு செய்திருந்தார்.
ALSO READ | GPS மூலம் பறவைகள் துல்லியமாக கண்காணிப்பு - ஆய்வாளர்கள் மகிழ்ச்சி!
ஆனால், கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. தினசரி பாதிப்புகள் 8 ஆயிரத்தில் இருந்து 7 ஆயிரமாக குறைந்து வந்த நிலையில், திடீரென பாதிப்பு 9 ஆயிரத்தைக் கடந்தது. இது குறித்து ஆய்வு செய்த அந்நாட்டு பிரதமர் போரீஸ் ஜான்சன், கொரோனா ஊரடங்கு விதிமுறைகளில் தளர்வுகள் அறிவிக்கப்படாது என்றும், இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைப்பதாகவும் அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்புக்கு அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோர் ஆதரவளித்துள்ளனர்.
இதனிடையே, இங்கிலாந்தில் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் 90 விழுக்காட்டினர், இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வைரஸால் பாதிக்கபட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. ஊரடங்கு விதிமுறைகள் நீட்டிக்கப்பட்டவுடன் லண்டனில் இருக்கும் இம்பீரியல் கல்லூரி, கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரிப்பு குறித்து களத்தில் இறங்கி ஆய்வு செய்தது.
ALSO READ | ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்த மனைவியின் நினைவாக 450 மரங்களை நட்ட கணவர்!
சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் பெரும்பாலும் டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஏப்ரல் மற்றும் மே மாத தொடக்கங்களில் சேகரிக்கப்பட்ட தரவுகளுடன், மே மாதம் இறுதி மற்றும் ஜூன் மாதம் தொடக்கத்தில் சேகரிக்கப்பட்ட தரவுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது பரவல் விகிதம் இரட்டிப்பு வேகத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.
குறிப்பாக இளம் வயதினரிடையே டெல்டா வைரஸின் தாக்கம் அதிகம் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பேசிய இம்பீரியல் கல்லூரி பேராசிரியர் ஸ்டீவன் ரைலி, ஒவ்வொரு 11 நாட்களுக்கும் டெல்டா வைரஸின் பரவல் விகிதம் இரட்டிப்பு வேகத்தில் இருப்பதாக தெரிவித்தார்.
ALSO READ | கொடூரமாக 80 பேரை வேட்டையாடிய 'ஒசாமா பின்லேடன்' முதலை..!
இது மிகவும் கவலையளிக்கக்கூடிய செய்தி எனத் தெரிவித்த அவர், இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேகமான தடுப்பூசி செலுத்தும் நடைமுறைகளால் டெல்டா வைரஸின் நிலையை முழுமையாக அறிவதில் சிக்கல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இருக்கக்கூடிய இளம் வயதினரில் ஏறத்தாழ மூன்று பகுதியினர் ஒரு டோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்த பேராசியர் ஸ்டீவன் ரைலி, சரிபாதி இளம் வயதினர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
ALSO READ | மண் குளத்தில் உருண்டு, புரண்டு சேற்றை தெறிக்க விட்ட யானை - வைரலாகும் வீடியோ!
இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் மேட் ஹேன்காக் பேசும்போது, இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களிடையே டெல்டா வைரஸ் பாதிப்பு மிக குறைவாக இருப்பதாகவும், ஒரு டோஸ் எடுத்துக் கொண்டவர்களுக்கு மிதமான பாதிப்பு மட்டுமே உள்ளது எனத் தெரிவித்துள்ளார். தடுப்பூசிகள் டெல்டா வைரஸை தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Covid-19, COVID-19 Second Wave