டெல்லியிலும் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு: நிரம்பும் மருத்துவமனைகள்

கொரோனா

டெல்லியிலும் முக்கியமான மருத்துவமனைகளில் கொரோனா பாதித்தவர்களுக்கு பெட் இல்லாத சூழல் உருவாகிவருகிறது.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவத்தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போதுவரை தொடர்ந்துவருகிறது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுவருகின்றன. இருப்பினும், முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. பிரபலங்கள் பலருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுவருகிறது. கொரோனா முதல் அலையில் பாதிக்கப்படாத பலரும் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். சச்சின் டெண்டுல்கர், அமீர்கான் உள்ளிட்ட பிரபலங்கள் பலருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் 50,000-த்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. அதேபோல டெல்லியிலும் இதுவரையில் இல்லாத அளவுக்கு 13,000-த்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  ஏற்கனவே மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தவர்களுக்கு மருத்துவமனையில் சேர்வதற்கு இருக்கை கிடைக்காத சூழல் உள்ளது. தற்போது, டெல்லியிலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் பெட் இல்லாத சூழல் உருவாகிறது. இதுகுறித்து தெரிவித்த எய்ம்ஸ் மருத்துவமனை மூத்த மருத்துவர், ‘டெல்லியிலுள்ள முக்கியமான பெரிய அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தற்போது அவசரசிகிச்சைப் பிரிவில் பெட் இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: