டெல்லியில் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு நடந்தே சென்ற பரிதாபம்

டெல்லியில் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு நடந்தே சென்ற பரிதாபம்
இடம்பெயரும் தொழிலாளர்கள்
  • Share this:
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், டெல்லி ஆனந்த்விஹார் பேருந்து நிலையத்தில் குவிந்த வெளிமாநில தொழிலாளிகள், தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முண்டியடித்த காட்சி நெஞ்சை பதறவைப்பதாக உள்ளது.

தலைநகர் டெல்லியில் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஜார்கண்ட், பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர்.

தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், டெல்லியில் உள்ள கூலித் தொழிலாளர்களுக்கு வேலையும் இல்லை. உணவும் கிடைக்க வழியில்லை. இதனால், சொந்த ஊருக்கு சென்று விடலாம் என நினைக்கும் தொழிலாளிகள் சரியான போக்குவரத்து வசதியும் இன்றி தவித்து வருகின்றனர். அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், கடந்த சில நாட்களாக குடும்பம் குடும்பமாக மூட்டை முடிச்சுகளுடன் பல நூறு கிலோ மீட்டர்கள் தூரம் கொண்ட தங்களது ஊர்களுக்கு நடந்தே செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


இவ்வாறு கடந்த 4 நாட்களில் சுமார் 2 லட்சம் பேர் கால்நடையாக தங்களது ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று டெல்லியில் இருந்து உத்தரபிரதேசம், ஜார்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு குறைந்த எண்ணிக்கையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதை அறிந்த வெளிமாநில கூலித் தொழிலாளர்கள், குழந்தைகளுடன் சாரை சாரையாக ஆனந்த்விஹார் பேருந்து நிலையத்துக்கு படையெடுத்தனர். சிறப்பு பேருந்துகள் மூலம் சொந்த ஊருக்கு சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் புறநகரில் இருந்த ஏராளமானோர் சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் வரை கால்நடையாக வந்து, ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர்.கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவும், சமூக விலகல் குறித்தும் பேசி வரும் நிலையில், வாழ்வாதாரத்தை இழந்து, குடும்பத்துடன் பட்டினியால் சாவதை விட, சொந்த ஊருக்கு சென்றுவிடலாம் என குவிந்த மக்களை பார்க்கும்போது வேதனையாகவும், அதே நேரத்தில் அதிர்ச்சியாகவும் உள்ளது.

கையில் பணமில்லை, உணவில்லை.. கொரோனாவைவிட குழந்தைகள் பட்டினி கிடப்பது எங்களுக்கு கவலையாக இருக்கு... அதனால்தான் சொந்த ஊருக்கே சென்ற விடலாம் என்று புறப்பட்டுவிட்டோம் என்று அவர்கள் கூறும் போது வேதனையளிக்கிறது.சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTubeFirst published: March 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading