Covid Relief : தனது சேமிப்பை கொரோனா நிதிக்கு அளித்த 11ம் வகுப்பு மாணவி - டெல்லி அரசு பாராட்டு!

சேமிப்பை கொரோனா நிதிக்கு அளித்த 11ம் வகுப்பு மாணவி

கொரோனா தடுப்பு பணிகளுக்காக தன் வாழ்நாள் சேமிப்பை நிவாரணமாக வழங்கிய டெல்லியைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவியை, டெல்லி மாநில பள்ளிக்கல்வித்துறை பாராட்டியுள்ளது.

  • Share this:
கண்ணுக்கு புலப்படாத கொரோனா வைரஸ் மனித சமூகத்தில் பேரழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சுகாதாரப் பேரிடராக மாறியிருக்கும் கொரோனா வைரஸை அழிக்க உலக நாடுகள் ஓரணியில் முயன்று வருகின்றன. மனித உயிருக்கு அசாதாரண அச்சுறுத்தலை உருவாக்கியிருக்கும் கொரோனாவை விரைவாக ஒழிக்க வேண்டிய நெருக்கடியும் நிலவி வருகிறது.

நாள்தோறும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது கவலையளிக்ககூடியதாக இருக்கிறது. நிரம்பி வழியும் மருத்துவமனைகளும், சுடுகாடுகளும் காண்போரை பதைபதைக்கச் செய்கின்றன. இந்த நேரத்தில் பல முனைகளில் இருந்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டிய தேவை உருவாகியிருக்கிறது. மருத்துவம், உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கிடைக்காமல் பலரும் அவதிப்படுகின்றன.

அவர்களின் அழுகுரல்களை கேட்பவர்கள் நிச்சயமாக இரவில் நிம்மதியாக தூங்க முடியாது. மத்திய, மாநில அரசுகள் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு இடையே தம்மால் இயன்ற உதவிகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். அந்த வகையில், டெல்லியைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவி, தன்னுடைய வாழ்நாள் சேமிப்பை கொரோனா நிவாரணப் பணிகளுக்காக கொடையாக வழங்கியுள்ளார். வசுந்திரா என்கிலேவ் பகுதியில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், அனுஷ்கா படித்து வருகிறார்.

ALSO READ | மாஸ்க் எப்படி போடனும்..? சொல்லிக்கொடுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

டெல்லி வாசியான அவர், தன்னுடைய மாநிலம் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்காக, வாழ்நாள் சேமிப்பை கொரோனா நிவாரணமாக வழங்கினார். அவரின் இந்த மனிதநேய மிக்க செயலை அம்மாநில பள்ளிக்கல்வித்துறையும் டிவிட்டரில் வெகுவாக பாராட்டியுள்ளது.

  

இதுபோன்ற சின்ன சின்ன மனிதநேயமிக்க செயல்கள், யாரோ ஒருவரின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என டெல்லி பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. அண்மையில், மதுரையைச் சேர்ந்த 2ம் வகுப்பு மாணவன் ஹரிஷ், முதலமைச்சர் நிவாரண நிதிக்காக ஆயிரம் ரூபாயை அனுப்பி வைத்தார்.

சைக்கிள் வாங்குவதற்காக சேமித்து வைத்த பணத்தை அவர் அனுப்பியது பலரையும் நெகிழ்ச்சியடைய செய்தது. ஆனால், அவருக்கு உடனடியாக இன்ப அதிர்ச்சியும் காத்திருந்தது. அவரின் மனிதநேயமிக்க செயலை பாராட்டிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறுவன் ஹரிஷின் ஆசையான சைக்கிளை வாங்கி கொடுத்து, தொலைபேசியிலும் கனிவாக உரையாடினார்.

தமிழக அரசின் கொரோனா நிவாரணப் பணிக்கு உதவிய அவருக்கு நன்றி தெரிவித்ததுடன், வைரஸ் பேரிடர் முடியும் வரை வீட்டிற்குள்ளேயே சைக்கிள் ஓட்டுமாறு அன்புடன் கேட்டுக்கொண்டார். மற்றொரு நெகிழ்ச்சியான நிகழ்வு தூத்துக்குடியில் நடந்துள்ளது. அதாவது, 11வயதான சிறுமி ரிதானா, தன்னுடைய அப்பாவின் இதய சிகிச்சைக்காக சேர்த்து வைத்திருந்த 1,970 ரூபாய் பணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கொடுத்தார்.

ALSO READ | கொரோனா நிவாரணப் பணிகளுக்காக 43 கிராமங்களை தத்தெடுத்த ஈஷா!

தன்னுடைய தந்தை கடந்த பிப்ரவரி மாதம் இறந்துவிட்டதால், மற்றொருவரின் சிகிச்சைக்கு அந்தப் பணம் உதவியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், 4 வருட சேமிப்பை கொடுத்துள்ளார். இதனைப் பெற்றுக்கொண்ட தூத்துக்குடி எம்.பி கனிமொழி, மாணவியின் கல்விக்கு தேவையான உதவியை செய்வதாக வாக்குறுதியளித்தார்.

இதேபோல், 7 வயது சிறுமி ஒருவர், தன்னுடைய தங்கைக்கு பட்டு பாவாடை வாங்குவதற்காக சேமித்து வைத்திருந்த 1,516 ரூபாயை கொரோனா நிவாரணப் பணிகளுக்காக கொடையளித்தார். சிறுவர், சிறுமியரின் இந்த செயல்கள் பலரையும் கொரோனா நிவாரணப் பணிகளுக்கு நிதியளிக்க காரணமாக அமைந்துள்ளது.
Published by:Sankaravadivoo G
First published: