• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனா தாக்கிய டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் கவலைக்கிடம்

கொரோனா தாக்கிய டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் கவலைக்கிடம்

டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின்

டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின், கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.

  • Share this:
    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சத்யேந்திர ஜெயினுக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    உடல் நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த செவ்வாயன்றி டெல்லி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல் பரிசோதனையில் வைரஸ் தொற்று இல்லாத நிலையில், கடந்த 17-ம் தேதி இரண்டாவது முறையாக அவரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    Also read... டிரம்ப் பதிவிட்ட வீடியோவை தூக்கிய பேஸ்புக் - அப்படி என்ன தப்பு...?

    இந்நிலையில், நுரையீரல் தொற்று அதிகரித்ததால், இன்று சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு சத்யேந்திர ஜெயினுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: