தடுப்பூசி எடுத்துக்கொள்வதன் மூலம் கொரோனா மூன்றாவது அலையில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்பட்டது. நாளொன்றுக்கு 40 ஆயிரம் பேருக்கு மேல் தொற்று உறுதி செய்யப்பட்டதால், கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் டெல்லியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் பின் பல்வேறு முறை ஊடங்கு நீட்டிக்கப்பட்டது. தற்போது அமலில் உள்ள ஊரடங்கு நாளையுடன் நிறைவடைகிறது. கடந்த சில நாட்களாக டெல்லியில்
கொரோனா எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் ஊடங்கு விலக்கிக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் இன்று காணொலி மூலம் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ” ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போது தொற்று கண்டறிப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனினும், தினசரி பாதிப்பு ஆயிரத்துக்கு மேல் உள்ளது. இதனால் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது” என தெரிவித்தார்.
கொரோனா பாதிப்பு 2.5 சதவீதத்துக்கும் கீழ் சென்றுள்ளது என்றும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1600 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஊடங்களில் படிப்படிப்பாக தளர்வுகள் அறிவிக்கப்படும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
தடுப்பூசி எடுத்துக்கொள்வதன் மூலம்
கொரோனாவின் 3வது அலையில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம் என்று குறிப்பிட்ட அவர், தடுப்பூசி தொடர்பாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வருவதாகவும், தடுப்பூசிக்காக அரசின் நிதியில் இருந்து செலவிட தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.