Home /News /coronavirus-latest-news /

மருத்துவமனையின் நிலையை எடுத்துரைத்த டாக்டர் மீது நடவடிக்கை: டெல்லி அரசைக் கண்டித்த உச்ச நீதிமன்றம்

மருத்துவமனையின் நிலையை எடுத்துரைத்த டாக்டர் மீது நடவடிக்கை: டெல்லி அரசைக் கண்டித்த உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

டெல்லியில் மருத்துவமனையின் நிலையை எடுத்துரைத்த டாக்டர் மீது அம்மாநில அரசு நடவடிக்கை எடுக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

    டெல்லியில் மருத்துவமனையின் நிலைமையை எடுத்துரைத்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் சடலங்களைக் கையாள்வது குறித்து உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.கே. கவுல், எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, மருத்துவமனையின் மோசமான நிலை குறித்து வீடியோ வெளியிட்ட மருத்துவரை இடைநீக்கம் செய்தது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதைக் கைவிட வேண்டும் என்றும், உண்மையை மறைக்க முடியாது என்றும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதுகுறித்து பதிலளிக்க டெல்லி அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

    Also see:
    Published by:Rizwan
    First published:

    Tags: Arvind Kejriwal, CoronaVirus, Delhi

    அடுத்த செய்தி