தொடங்கப்பட்டது முதல் ப்ளாஸ்மா வங்கி: ப்ளாஸ்மா தானத்துக்கான வழிமுறைகள் என்ன? விதிகள் என்ன?

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்த பின்பு ,14 நாட்கள் கழித்து ப்ளாஸ்மா தானம் அளிக்கும் வகையில், டெல்லியில் முதன்முறையாக ப்ளாஸ்மா வங்கி தொடங்கப்பட்டுள்ளது.

தொடங்கப்பட்டது முதல் ப்ளாஸ்மா வங்கி: ப்ளாஸ்மா தானத்துக்கான வழிமுறைகள் என்ன? விதிகள் என்ன?
ப்ளாஸ்மா வங்கி
  • Share this:
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்த பின்பு , 14 நாட்கள் கழித்து ப்ளாஸ்மா தானம் அளிக்கும் வகையில், டெல்லியில் முதன்முறையாக ப்ளாஸ்மா வங்கி தொடங்கப்பட்டுள்ளது.

டெல்லி அரசு Liver and Biliary Sciences (ILBS). நிறுவனத்தில் இந்த ப்ளாஸ்மா வங்கியை அமைத்துள்ளது. இதுகுறித்து பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “குணமடைந்தவர்கள் 1031 என்ற எண்ணுக்கு அழைத்து தங்களை ப்ளாஸ்மா தானம் அளிப்பவர்களாக பதிவு செய்து கொள்ளலாம்.  வாட்சப் எண் 8800007722-க்கு அழைத்து,  ப்ளாஸ்மா தானம் எங்கு பெறலாம் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

அரசு மருத்துவர் ப்ளாஸ்மா தானம் வழங்க விரும்புபவரைத் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிந்துகொண்டு, தானமளிக்க வரவழைப்பார். ப்ளாஸ்மா அளிக்க வருவதற்கான போக்குவரத்து செலவை அரசு ஏற்றுக்கொள்ளும். 18 முதல் 60 வயதுக்கு இடையிலான வயதில் இருப்பவர்களும், 50 கிலோ எடைக்கு குறையாமலும் இருந்தால் அவர்கள் ப்ளாஸ்மா தருவதற்கு தகுதியானவர்கள்.


கருவுற்ற தாய்மார்கள், நீரிழிவு அளவுகளில் சமநிலை அற்றவர்கள், இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் இருப்பவர்களும் ப்ளாஸ்மா தானம் செய்யமுடியாது.
First published: July 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading