கொரோனா பாதித்த இரண்டு உயிர்களை காப்பாற்றிய போலீஸ் அதிகாரி - குவியும் பாராட்டு!

ஆகாஷ் தீப்

பிளாஸ்மா கொடை வழங்கி தாயையும், சேயையும் ஒரு சேர காப்பாற்றிய காவல்துறையினரின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

 • Share this:
  கொரோனா வைரஸ் ஒருபுறம் உடல் ரீதியான பாதிப்புகளையும் மரணங்களையும் ஏற்படுத்திக்கொண்டிருக்க, மறுபுறம் கொரோனா பாதித்தவர்களின் உறவினர்களையும் நண்பர்களையும் மன அழுத்தத்தில் தள்ளியிருக்கிறது. ஒருவருக்கு கொரோனா பாதித்தவுடன் அவரது நண்பர்களும் உறவினர்களும் எந்த மருத்துவமனையில் படுக்கை இருக்கிறது, அது ஆக்ஸிஜன் வசதியுடன் இருக்கிறதா? வெண்டிலேட்டர் வசதி இருக்கிறதா? கொரோனா பாதித்து மீண்டவர்களிடம் இருந்து பிளாஸ்மா கிடைக்குமா? என அலையும் அலைச்சல் அவர்களை உச்சகட்ட மன அழுத்தத்தில் தள்ளியிருக்கிறது.

  இப்படி நாடு முழுவதும் மக்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கொரோனாவின் கோரத்தாண்டவத்தில் சிக்கித்தவித்து வருகின்றனர். தன்னார்வலர்களும் தங்களால் இயன்ற அளவு மக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர். நிலைமை இப்படி இருக்க, அவ்வப்போது சின்ன சின்ன நல்ல செய்திகளும் வெளியாகி மக்களுக்கு வாழ்வின் மீதான நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது.

  இதன் ஒரு பகுதியாக டெல்லியில் கடந்த வாரம் கர்ப்பமாக உள்ள பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அவரது குடும்பத்தினர் அந்த பெண்ணுக்கு பிளாஸ்மா உதவி கேட்டு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  ALSO READ : அமெரிக்காவில் தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்களுக்கு முகக்கவசத்திலிருந்து விடுதலை: மிகப்பெரிய மைல்கல், நல்ல நாள்- அதிபர் பைடன் உற்சாகம்

  டெல்லி காவல்துறையினர் ஜீவன் ரக்சக் என்ற பெயரில் டெல்லி காவல்துறையினர் பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வரும் நிலையில் அவர்களுக்கு இந்த தகவல் தெரியவந்திருக்கிறது. அவர்கள் உடனடியாக ரூப் நகர் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் சப் இன்ஸ்பெக்டர் ஆகாஷ்தீப் என்பவரை தொடர்பு கொண்டிருக்கிறார்கள்.  அதற்கு உடனடியாக சம்மதித்த ஆகாஷ் தீப், மே 10ம் தேதி அந்த பெண் அனுமதிக்கப்பட்டுள்ள உத்தம் நகர் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சென்று மருத்துவமனையில் பிளாஸ்மா கொடை வழங்கியுள்ளார்.

  Delhi Police Sub Inspector Akashdeep
  ஆகாஷ் தீப்


  பின்னர் ஆகாஷ் தீப்பை சந்தித்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் தங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டனர். மேலும் கடினமான கால கட்டத்தில் டெல்லி காவல்துறையினரின் துரித நடவடிக்கையை பாராட்டினர். இதனையடுத்து அந்த பெண் முழுமையாக நலம் பெற்றுவர, அவரது குடும்பத்தினருக்கு ஆகாஷ்தீப் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். பிளாஸ்மா கொடை வழங்கி தாயையும், சேயையும் ஒரு சேர காப்பாற்றிய காவல்துறையினரின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

  ALSO READ : இந்தியாவில் பரவி வரும் B.1.617 கொரோனா வைரஸ் 44 நாடுகளில் பரவியுள்ளது: WHO தகவல்

  அந்த மனசு தான் சார் கடவுள்! என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் எங்கு பார்த்தாலும் துயரச் செய்திகளை மட்டுமே எதிர்கொண்டு வரும் மக்களுக்கு, இதுபோன்ற மனித நேயம் மிக்க சிலரின் செயல்கள் வாழ்வின் மீதான நம்பிக்கையை அளித்திருக்கிறது.
  Published by:Sankaravadivoo G
  First published: