அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், அரசியலை மறந்து அனைவரும் இணைந்து கொரோனா சூழலில் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வடமாநிலங்களில் கொண்டாடப்படும் சத் பூஜா விழாவிற்கு தடை விதிக்கவில்லை என்று கூறிய கெஜ்ரிவால், மக்கள் ஒரே நேரத்தில் ஆறுகள் மற்றும் குளத்தில் இறங்க மட்டுமே தடை உள்ளது என்றார்.
மேலும் 200-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் குளத்தில் இறங்கினால். ஒருவருக்கு கொரோனா இருந்தாலும் அது அனைவருக்கும் பரவிவிடும் என்பதாலேயே இந்த முடிவை எடுத்ததாக கெஜ்ரிவால் விளக்கமளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து பேசியவர், நாட்டின் பிற பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், டெல்லியில் கடந்த 3 வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்போருக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது என்று கூறினார்.
மேலும் பொது இடங்களில் முகக்கவசங்களை வழங்க அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.