அதிகரிக்கும் பரிசோதனைகள்.. தாமதமாகும் பரிசோதனை முடிவுகள்- ஆய்வகத்திறன் அதிகரிக்கப் படுமா?

கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள் வெளியாவது தாமதமாவதால் ஆய்வக திறனை அதிகரிக்க வேண்டிய தேவை அவசியமாகியுள்ளது.

அதிகரிக்கும் பரிசோதனைகள்.. தாமதமாகும் பரிசோதனை முடிவுகள்- ஆய்வகத்திறன்  அதிகரிக்கப் படுமா?
கோப்புப்படம்
  • Share this:
தமிழ்நாட்டில் பரிசோதனைகள் அதிகரிக்கப்படுவது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும் பல மாவட்டங்களில் பரிசோதனை முடிவுகள் தாமதமாக வருகின்றன. பொதுவாக அரசு மருத்துவமனைகளில் 48 மணி நேரத்திலும் தனியார் ஆய்வகங்களில் அதற்கும் உள்ளாகவும் பரிசோதனை முடிவுகள் கிடைத்து வந்தன. ஆனால் தற்போது ஒரு வார காலமாகியும் பரிசோதனை முடிவுகள் கிடைப்பதில்லை என்று புகார்கள் வருகின்றன.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வரை 50,000 என்ற அளவில் இருந்த பரிசோதனை தற்போது கிட்டத்தட்ட 65,000 தொடும் அளவு உள்ளது. பரிசோதனைகளை அதிகரிக்கும் நோக்கில் மாதிரிகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படுவதை களத்தில் காண முடிகிறது, சில வாரங்களுக்கு முன்பாக, முன் வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வதில்லை என்பது குற்றச்சாட்டாக இருந்து வந்தது.

ஆனால் தற்போது அந்த நிலை இல்லை என்பது மகிழ்ச்சியான செய்தியாகும். அதேவேளை, எடுக்கப்பட்ட மாதிரிகளின் முடிவுகள் ஒரு வாரத்துக்கு மேலாக கூட தாமதமாக வருவதாக பொதுமக்களும் மருத்துவர்களும் புகார் தெரிவிக்கின்றனர். மாதிரிகளின் எண்ணிக்கை அதிகரித்த அளவுக்கு ஆய்வக திறனும், தொழில்நுட்பர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்காததே இதற்கு காரணமாக உள்ளன. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை புதிதாக ஒரு ஆய்வகத்துக்கு தமிழகத்தில் அனுமதி கிடைத்து வந்தாலும் அரசு ஆய்வகங்கள், எடுக்கப்படும் மாதிரிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு இல்லை என்று கூறுகின்றனர்.


உதாரணமாக, ஒன்றிணைந்த வேலூர் மாவட்டம்- அதாவது தற்போது பிரிக்கப்பட்டிருக்கும் ராணிப்பேட்டை மாவட்டத்துக்கும்  சேர்த்து வேலூர் அரசு மருத்துவமனை ஆய்வகத்தில் மட்டுமே கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதுகுறித்து அரசு மருத்துவர் ஒருவர் கூறுகையில், “ராணிப்பேட்டை மட்டுமல்லாமல் சில சமயம் திருப்பத்தூர் மாவட்டத்திலிருந்தும் மாதிரிகள் வரும். இந்த மூன்று மாவட்டங்களிலிருந்து சுமார் 1,500க்கும் மேற்பட்ட மாதிரிகள் எடுக்கப்படுகின்றன. வரும் வாரத்தில் இந்த மாதிரிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே எடுக்கப்படும் மாதிரிகளின் முடிவுகள் தெரியவே ஒரு வாரம் காலம் ஆகிறது. சில நேரங்களில் முடிவுகள் வரும் முன் நோயாளி இறந்து விடுகிறார், அல்லது குணமாகி விடுகிறார்” என்று கூறுகிறார்.

Also read: திருச்சியில் செயல்பட்டுவந்த ஒரே தனியார் கொரோனா பரிசோதனை மையத்தின் உரிமம் ரத்து - மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திருச்சியில் கடந்த வாரத்தில் பரிசோதனை முடிவுகள் தாமதமாவதால் 1,600 மாதிரிகளை தனியார் ஆய்வகத்தில் கொடுத்திருந்தனர். ஒரு நாளுக்கு சுமார் 300 முதல் 400 தொற்று கண்டறியப்படும் மாவட்டமாக உள்ள விருதுநகரில் ஒரு ஆய்வகம் மட்டுமே உள்ளது. எனவே மாதிரிகளை அருகில் உள்ள மாவட்டங்கள் அல்லது சென்னைக்கு அனுப்பி வைக்கும் சூழல் உள்ளதால் பரிசோதனை முடிவுகள் தாமதமாகின்றன.தமிழகத்துக்கு தொடர்ந்து பி சி ஆர் கிட்டுகள் தென் கொரியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தாலும் அதை இயக்குவதற்கான கருவிகளும் மனிதவளமும் தேவை. கருவிகளில் மாதிரிகளை செலுத்துவதற்கு முன்னால் ஆர் என் ஏ பிரித்தெடுக்கும் பணியை ஆய்வக தொழில்நுட்பர்கள் செய்ய வேண்டும். எனவே மாதிரிகளை அதிகரிப்பது போலவே, கருவிகள், தொழில்நுட்பர்களின் எண்ணிக்கையையும் அதிகரிப்பது அவசியமாகிறது.
மாவட்டம் அரசு ஆய்வகங்கள் தனியார் ஆய்வகங்கள்
சென்னை 13 28
கோவை 2 9
தேனி 1 0
திருநெல்வேலி 1 2
திருவாரூர் 1
சேலம் 2 1


 

விழுப்புரம்
2
மதுரை 1 6
தருமபுரி 2
திருச்சி 1 4
ஈரோடு 2 1
வேலூர் 1 1
தஞ்சாவூர் 1 1


 

கன்னியாகுமரி
2 1
தூத்துக்குடி 1


 

கிருஷ்ணகிரி
2
நீலகிரி 2
கடலூர் 1
திருவண்ணாமலை 2
காஞ்சிபுரம் 1 2


 

புதுக்கோட்டை
1
சிவகங்கை 2
விருதுநகர் 1
ராமநாதபுரம் 1
அரியலூர் 1


 

திருப்பூர்
1
கள்ளக்குறிச்சி 1
திருவள்ளூர் 1
திண்டுக்கல் 1
நாமக்கல் 2
நாகப்பட்டினம் 1
திருப்பத்தூர் 1
பெரம்பலூர் 1


 

தென்காசி
1
செங்கல்பட்டு 0 2
ராணிப்பேட்டை 0 1

 
First published: July 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading