நிழல்உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா?

தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று வெளியான தகவலுக்கு தாவூத் சகோதரர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

நிழல்உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா?
தாவூத் இப்ராஹிம்
  • Share this:
தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதை தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் கராச்சியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது.

மேலும், தாவூத் இப்ராஹிம் உதவியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தகவல் வெளியானது.

இதனை தாவூத் இப்ராஹிம் சகோதரர் அனீஷ் இப்ராஹிம் மறுத்துள்ளார்.


இது தொடர்பாக ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது குடும்பத்தினர் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்றும்,  ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பாகிஸ்தானில் வணிகத்தை நடத்துவதாகவும், தாவூத்தின் சகோதரர் அனீஷ் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

மும்பையில் பிறந்த தாவூத் இப்ராஹிம், 1993-ம் ஆண்டு நடைபெற்ற மும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்டவர். இந்தியாவில் தேடப்பட்டு வரும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள இவர் பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

First published: June 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading