கொரோனாவுக்கு எதிராக போராட ₹ 21 கோடி - டாபர் நிறுவனம் அறிவிப்பு

"பெரு நிறுவனங்கள் பி.எம் கேருக்கு கோடிக்கணக்கான ரூபாயை நிவாரணமாக அளித்து வருகின்றன"

கொரோனாவுக்கு எதிராக போராட ₹ 21 கோடி - டாபர் நிறுவனம் அறிவிப்பு
டாபர்
  • News18
  • Last Updated: April 10, 2020, 4:11 PM IST
  • Share this:
இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகப்பெரிய பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு எதிராக போராட 21 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக டாபர் நிறுவனம் கூறியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏழை, நடுத்தர மக்கள் வாழ்விலும் மிகப்பெரிய பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான பி.எம் கேர் என்ற சிறப்பு நிவாரண நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பெரு நிறுவனங்கள் பி.எம் கேருக்கு கோடிக்கணக்கான ரூபாயை நிவாரணமாக அளித்து வருகின்றன. இந்த நிலையில், டாபர் நிறுவனமும், கொரோனாவுக்கு எதிராக போராட ரூ21 கோடியை ஒதுக்கியுள்ளது. இதில், 11 கோடி ரூபா பிரதமரின் நிவாரண நிதிக்கு ஒதுக்கப்படும்.


மீதமுள்ள தொகை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

“கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சமூகத்திற்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை புரிந்துகொண்டுள்ளோம். கொரோனாவுக்கு எதிரான போரில் டாபர் நிறுவனம் முன்னிலையில் நிற்கும்” என்று அந்நிறுவன தலைவர் அமித் பர்மன் தெரிவித்துள்ளார்.









First published: April 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading