ஊரடங்கு மட்டுமே பலன் தராது... இவற்றையும் செய்ய வேண்டும்...! உலக சுகாதார மைய இயக்குநர் கருத்து

டெட்ரோஸ் - உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்

கொரோனாவை அழிக்க வேண்டும் என்றால் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து போராட வேண்டும்

  • Share this:
    ஊரடங்கு நடவடிக்கை மட்டும் கொரோனாவை கட்டுப்படுத்தாது என்று உலக சுகாதார மைய இயக்குநர் டெட்ராஸ் அத்நாம் கெப்ரியாசிஸ் பேசியுள்ளார்.
    உலகிற்கே பெரும் சவாலாக விளங்கி வரும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கி உள்ளது. மனிதர்கள் மூலமாக வேகமாக பரவி வருவதால், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளிலேயே முடக்கப்பட்டுள்ளனர்.


    இது குறித்து உலக சுகாதார மைய இயக்குநர் டெட்ராஸ் அத்நாம் கூறுகையில்,  பொதுமக்கள் தனித்திருப்பதாலும், சமூக விலகலை பின்பற்றுவதாலும் வைரசை கட்டுப்படுத்த முடியாது. ஊரடங்குடன் கொரோனா பாதித்தவரை கண்டறிந்து, பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், தனிமைப்படுத்துதல் மற்றும் ஒவ்வொரு தொடர்புடைய நபர்களையும் கண்டறிவது அவசியம் என்பதை அரசாங்கங்கள் உறுதி செய்யவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


    இதுமட்டுமில்லாமல், கொரோனாவை அழிக்க வேண்டும் என்றால் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றும் டெட்ராஸ் வலியுறுத்தியுள்ளார்.


    Also see...

     






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
    Published by:Vaijayanthi S
    First published: