திருப்பதியில் மதியம் 2 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு?

மாதிரிப்படம்

கொரோனா தொற்று காரணமாக மதியம் 2 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை திருப்பதியில் ஊரடங்கு அமல் படுத்தப்படும் என திருப்பதி எம்.எல்.ஏ. கருணாகர ரெட்டி தலைமையில், கொரோனா பரவலை கட்டுபடுத்த அமைக்கப்பட்ட டாஸ்க்போர்ஸ் கமிட்டி அறிவித்துள்ளது.

  • Share this:
    ஆந்திர மாநில அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இரவு 10 மணிமுதல் காலை 5 மணிவரை ஊரடங்கு அறிவித்துள்ளது. திருப்பதி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அனைத்து மண்டலங்களிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இதன் காரணமாக திருப்பதி மாநகராட்சியில் எம்.எல்.ஏ. கருணாகர ரெட்டி தலைமையில் மேயர் சிரிஷா, ஆணையாளர் கிரிஷா, திருப்பதி எஸ்.பி. வெங்கடஅப்பல் நாயுடு உள்ளிட்டோர் கூடி கொரோனா பரவலை கட்டுபடுத்துவது பற்றிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ. கருணாகர ரெட்டி, “திருப்பதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இந்த ஆண்டும் நாளை முதல் திருப்பதி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மதியம் 2 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

    இதற்கு வணிகர் சங்கத்தினர் மற்றும் ஆட்டோ சங்கத்தினர் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். திருப்பதியில் காய்கறி மார்க்கெட்டிற்கு ஒரே நேரத்தில் பொதுமக்கள் வருவதை தடுக்கும் விதமாக மாநகராட்சிக்குட்பட்ட 9 இடங்களில் காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட உள்ளது.

    புகழ்பெற்ற திருப்பதி கங்கையம்மன் கோவில் திருவிழாவும் ரத்து செய்யப்படுகிறது. நகரில் உள்ள அனை

    Must Read :  மதுரையில் இன்று அழகர் கோவில் வளாகத்திலேயே நடக்கிறது வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்வு...

     

    கொரோனா பரவலை தடுக்க நாடு மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன.  இந்நிலையில், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளான மே 2ஆம் தேதி முழு ஊரடங்கு இருப்பதாகவும், வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாளான மே ஒன்றாம் தேதி சனிக்கிழமையும் முழு ஊரடங்கை அறிவிக்கலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: