பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிக்க கர்நாடக அரசு முடிவு

பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிக்க கர்நாடக அரசு முடிவு
மாதிரி படம்
  • Share this:
கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட மாவட்டங்களில் ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45ஆக அதிகரித்துள்ள நிலையில், மைசூரு, பிதார், தக்‌ஷின் மற்றும் உத்தர கன்னடா உள்ளிட்ட மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இதனால், அந்த மாவட்டங்கள் ஆபத்தான பகுதிகளாக அடையாளமிடப்பட்டு, ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லி மாநாட்டுக்கு சென்ற வந்தவர்களில் பலருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்த அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர், ஊரடங்கு உத்தரவை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறினார்.


கொரோனா வைரஸின் எதிரொலியாக இந்தியா முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also see...










சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: April 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading