HOME»NEWS»CORONAVIRUS-LATEST-NEWS»curfew extended to july 17 in the uk sur

இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு

வெளிநாட்டில் இருந்து வரும் நபர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
போரிஸ் ஜான்சன்
  • Share this:

இங்கிலாந்தில் உருமாறிய புதியவகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஜூலை மாதம் 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் உருமாமாற்றம் அடைந்த புதியவகை கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவியதால், அந்நாட்டில், மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல்வேறு நாடுகள் இங்கிலாந்து உடனான விமான போக்குவரத்தை தற்காலிகமாக ரத்து செய்தன.

இந்நிலையில், இங்கிலாந்தில் வரும் ஜூலை 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள வெளிநாட்டில் இருந்து வரும் நபர்கள் 10 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.



மேலும் படிக்க... டொனால்டு டிரம்ப் பதவிக்காலத்தில், 30,573 பொய்கள் பொதுவெளியில் பேசியுள்ளார் - ஆய்வில் தகவல்

மேலும், இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா பாதிப்பால், உயிரிழப்பு அதிகமாகும் அபாயம் இருப்பதாக போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார். எனவே, தடுப்பூசி திட்டம் சரியான வகையில் வேலை செய்யும்வரை வரை ஊரடங்கை தளர்த்துவதற்கு வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Suresh V
First published: