• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறதா? மருத்துவக் குழுவினரோடு இன்று ஆலோசிக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி...

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறதா? மருத்துவக் குழுவினரோடு இன்று ஆலோசிக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி...

முதலமைச்சர்

முதலமைச்சர்

மருத்துவ நிபுணர் குழுவோடு முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை உள்ளார். இதனால் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? தளர்வு அளிக்கப்படுமா? என்பது நாளை தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

  • Share this:
    நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த பிரதமர் மோடி கடந்த மார்ச் 24-ஆம் தேதி ஊரடங்கை அறிவித்தார். தொற்று தொடர்ந்து அதிகரித்ததால் 2-ஆம் கட்டம், 3-ஆம் கட்டம், 4-ஆம் கட்டம் என ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.

    ஆனால் பல மாநிலங்களில் பாதிப்பு மட்டும் குறைந்தபாடில்லை. நான்காம் கட்ட ஊரடங்கும் ஞாயிற்றுக் கிழமையோடு முடிவுக்கு வரும் நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

    இதேபோல், தமிழக பாதிப்பு நிலவரம் குறித்து கடந்த 26ஆம் தேதி மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

    தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு, காணொலிக் காட்சி மூலம் இந்த ஆலோசனை நடைபெற்றது. அப்போது, மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நிலை, நோய் தடுப்பு பணிகள் குறித்து அவர் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

    ஆலோசனை கூட்டத்திற்கு பின் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் நோய் தடுப்பு பணிகளை பட்டியலிட்டார். மற்ற மாவட்டங்களை விட சென்னையில் பாதிப்பு அதிகமாக உள்ளதாக குறிப்பிட்ட அவர், தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

    இந்த நிலையில், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தின் முடிவில், ஆட்சியர்கள் தெரிவித்த கருத்துக்களும், மருத்துவ குழுவின் பரிந்துரையை அடிப்படையாக கொண்டும் ஊரடங்கை நீட்டிப்பதா? தளர்வு அளிப்பதா? என்பது குறித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழகத்தை பொறுத்தவரை சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலேயே அதிக தொற்று ஏற்பட்டுள்ளது.

    Also see...

    தமிழகத்தில் முதலீடு செய்ய முன்னணி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: