• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • ஊரடங்கு: அரிவாள் தயாரிப்பு பணி நிறுத்தம்: மூடப்பட்டன 50-க்கும் மேலான பட்டறைகள்..!

ஊரடங்கு: அரிவாள் தயாரிப்பு பணி நிறுத்தம்: மூடப்பட்டன 50-க்கும் மேலான பட்டறைகள்..!

அரிவாள் தயாரிப்பு பட்டறைகள்

அரிவாள் தயாரிப்பு பட்டறைகள்

அரிவாள் தவிர டிராக்டர்களில் பயன்படுத்தப்படும் உழவு கருவிகளும் அதிகளவில் தயாரித்து வருகின்றனர்.

  • Share this:
திருப்புவனம் பகுதியில் ஊரடங்கால் அரிவாள் தயாரிப்பு பணி நிறுத்தப்பட்டு 50-க்கும் மேற்பட்ட பட்டறைகள் மூடப்பட்டது.

திருப்புவனம் பகுதியில் ஊரடங்கால் அரிவாள் பட்டறைகள் மூடப்பட்டதால் அதனையே நம்பியுள்ள 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தவிக்கின்றனர். திருப்பாச்சேத்தி அரிவாள் உலகப் புகழ் பெற்ற அரிவாள். ஊரடங்கு உத்தரவால் பட்டறைகள் மூடப்பட்டு அதனையே நம்பியுள்ள தொழிலாளர்கள் கடந்த 25 நாட்களாக தவித்து வருகின்றனர்.

திருப்பாச்சேத்தி, திருப்புவனம் பகுதியில் அரிவாள், மண்வெட்டி, கத்தி, களை வெட்டி, கடப்பாரை உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் செய்யப்படுகின்றன. உடல் உழைப்பையே நம்பியுள்ள தொழிலாளர்கள் பலரும் திருப்பாச்சேத்தி தயாரிப்புகளையே விரும்புவார்கள், அந்தளவு கலை நேர்த்தியும், எடை குறைவாகவும், கூர்மையாகவும் இப்பகுதியில் தயாரிக்கப்படும் ஆயுதங்கள் இருக்கும்.

சிவகங்கை , ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாலான கூலி தொழிலாளர்கள் கருவேல மரம் வெட்டுவதையே தொழிலாக கொண்டுள்ளனர். 10 முதல் 50 தொழிலாளர்கள் இணைந்து கருவேல மரங்களை வெட்டி பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் திருப்பாச்சேத்தி அருவாக்களையே பயன்படுத்தி வருகின்றனர்.

அரிவாள் தவிர டிராக்டர்களில் பயன்படுத்தப்படும் உழவு கருவிகளும் அதிகளவில் தயாரித்து வருகின்றனர். திருப்பாச்சேத்தி, திருப்புவனம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட அரிவாள் தயாரிப்பு பட்டறைகள் ஊரடங்கால் மூடப்பட்டுள்ளன. ஒவ்வொரு பட்டறையிலும் 3 முதல் 10 தொழிலாளர்கள் வரை பணி புரிகின்றனர். பட்டறைகள் மூடப்பட்டதால் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டதுடன் விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

அரிவாள் பட்டறை நடத்தி வரும் சந்திரசேகர் கூறுகையில், மதுரையில் இருந்து பழைய கனரக வாகனங்களின் இரும்பு பட்டைகளை எடைக் கணக்கில் வாங்கி வந்து அரிவாள் கடப்பாறை உள்ளிட்டவைகள் தயாரிக்கிறோம், நாள் ஒன்றுக்கு மூன்று பேர் சேர்ந்து ஐந்து அரிவாள் வரை தயாரிப்போம். முற்றிலும் உடல் உழைப்பையே நம்பி இந்த தொழிலில் உள்ளோம்.

அன்றாடம் உழைத்தால்தான் சம்பளம் வழங்க முடியும், விவசாயிகள் பலரும் தங்களுக்கு தேவையான அரிவாள், கோடாரி, களைவெட்டி உள்ளிட்டவைகளை வாங்கி செல்வார்கள். கடந்த 25 நாட்களாக பட்டறைகள் மூடப்பட்டதால் பல தொழிலாளர்கள் பிழைப்பின்றி உள்ளளனர். எனவே மாவட்ட நிர்வாகம் விவசாய கருவிகளை தயாரிக்க பட்டறைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் எம்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Also see...






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: