கொரோனா தொற்றால் கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலை மூடல்

கொரோனா பரவல் காரணமாக கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ரசாயன தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது

கொரோனா தொற்றால் கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலை மூடல்
கொரோனா பரவல் காரணமாக கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ரசாயன தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது
  • Share this:
கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் கடலூர் அடுத்து உள்ள சிப்காட் தொழிற்சாலையில் ஏராளமான ரசாயன தொழிற்சாலைகள் அமைந்துள்ள.  இங்கே 50 சதவீத பணியாளர்களுடன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் குடிகாடு பகுதியில் அமைந்துள்ள மருந்து தொழிற்சாலையில் சுமார் கடந்த ஒரு மாதத்தில் மட்டும்  பலருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 4ம் தேதி 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில்  குடிகாடு கிராமத்தில் இயங்கி வரும் தொழிற்சாலையால் பரவல் மேலும் அதிகரித்து வருகிறது. இதனால் தங்கள் கிராமத்திற்கு அபாயம் அதிகரிக்கும் என கிராம மக்கள் அச்சத்தில் உள்ளதனர்.

எனவே தொழிற்சாலையை 15 நாட்களுக்கு மூடி கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பாக தொழிற்சாலையைத் தொடங்க வேண்டும் என கடிதம் அனுப்பினார். இது தொடர்பாக நியூஸ் 18-ல் செய்தி வெளியானதன் அடிப்படையில் தொற்று ஏற்பட்ட தொழிற்சாலை  நிர்வாகத்திடம் கிராம மக்கள் நேற்று தொழிற்சாலையை மூட கோரி வலியுறுத்தினர்.




இந்நிலையில் 6-ம் தேதியிலிருந்து ஒன்பதாம் தேதி வரை தொழிற்சாலை மூடப்படுகிறது. இந்த நாட்களில் முற்றிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் மேம்படுத்தப்படும் என தொழிற்சாலை நிர்வாகம் சார்பிலும் சிப்காட் தொழிற்சாலை சார்பிலும்  அறிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் படிக்க...அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலின் சிறப்புகள் என்னென்ன?மேலும் அந்தந்த கிராமத்திற்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்த தொழிற்சாலை மூடப்பட்டாலும் கிராமத்திற்கு வழங்கப்படுகிற குடிநீரை நிறுத்தாமல் வழங்க வேண்டும் என்பதுதான் கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.
First published: August 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading