கடலூரில் குணமடைந்ததாக கூறி வீட்டிற்கு அனுப்பப்பட்ட கொரோனா நோயாளி திடீர் மரணம்

கடலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் குணமடைந்துவிட்டதாக 5 நாட்களிலேயே வீட்டிற்கு அனுப்பப்பட்ட நிலையில், அவர் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது உயிரிழந்தது உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூரில் குணமடைந்ததாக கூறி வீட்டிற்கு அனுப்பப்பட்ட கொரோனா நோயாளி திடீர் மரணம்
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: July 30, 2020, 9:11 PM IST
  • Share this:
கடலூர் கோண்டூர் ஜோதி நகரை சேர்ந்த 63 வயது நிரம்பிய பாலசந்தர் என்பவர் கடந்த 20-ம் தேதி சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அவருக்கு 23-ஆம் தேதி கொரோனா உறுதியானதை அடுத்து 24-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

படிக்க: முழு ஊரடங்கு நீட்டிப்பு - எவற்றுக்கெல்லாம் தடை தொடர்கிறது...?

படிக்க: கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் அமெரிக்காவில் படுகொலை - கணவன் வெறிச்செயல்
படிக்க: ’ஆண் குழந்தையுடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம்’ ஹர்திக் பாண்டியாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்
அங்கு அவர் மூச்சுத்திணறலுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 25 -ஆம் தேதி குணமடைந்துவிட்டதாக கூறி வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார். ஆனால் தொடர்ந்து மூச்சுத்திணறலால் அவதியுற்ற பாலசந்தர் வீட்டிற்கு வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
First published: July 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading