• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • முகக்கவசம் இல்லாமல் வெளியில் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: கடலூர் ஆட்சியர் எச்சரிக்கை!

முகக்கவசம் இல்லாமல் வெளியில் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: கடலூர் ஆட்சியர் எச்சரிக்கை!

பாதுகாப்பு பணியில் கடலூர் போலீசார் (கோப்புப்படம்)

பாதுகாப்பு பணியில் கடலூர் போலீசார் (கோப்புப்படம்)

முகக்கவசம் இல்லாமல் வருபவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி எச்சரிக்கை விடுத்து வீட்டுக்கு அனுப்பி வருகின்றனர்.

  • Share this:
    பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    கொரோனா வைரஸுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கப்பட்டபோதும் கடலூர் மாவட்டத்தில் கடந்த 3-ஆம் தேதி 3 பேருக்கும், 4-ஆம் தேதி 5 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், கொரோனா அறிகுறிகளுடன் சிறப்பு வார்டுகளில் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ரத்தம் மாதிரிகளில் 14 மாதிரிகளின் முடிவுகள் வெளியாகின. அதில், 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளது.

    மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிறப்பு வார்டில் 64 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என பலமுறை எச்சரிக்கை விடுத்தும் மக்கள் அத்யாவசியப் பொருட்கள் வாங்க வெளியே செல்கின்றனர்.

    இதனால் சாலையில் மக்கள் வைரஸ் நிலைமை புரியாமல்  முகக்கவசம் அணியாமல் வெளியே செல்கின்றனர் . இதனால் இன்று முதல் சாலையில் முகக்கவசம் இல்லாமல் வந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் அவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அத்துடன் அவர்களுக்கு காய்கறிகள் பெற அனுமதி வழங்கப்படாது என்றும் முகக்கவசம் இன்றி சாலையில் வந்தால் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும்  ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    காய்கறி வாங்க வரும் மக்களில் முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி தரப்படுகிறது. சாலையில் முகக்கவசம் இல்லாமல் வருபவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி எச்சரிக்கை விடுத்து வீட்டுக்கு அனுப்பி வருகின்றனர்.

    Also see...











    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: