கடலூர், புதுவை எல்லையில் தீவிர சோதனை... வாகனங்கள் கிருமி நாசினி தெளித்த பின் அனுமதி

கொரோனா சோதனைச்சாவடி

கடலூர் - புதுவை எல்லையில் கொரோனா பரவல் காரணமாக போலீசார் சோதனை செய்து வருகின்றனர். வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்து அதன்பின்னர் உள்ளே அனுமதித்து வருகின்றனர். அத்துடன் உடல் வெப்பநிலையையும் சோதனை மேற்கொள்ளப்படுகின்றது.

  • Share this:
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது . கடலூர் மாவட்டத்திலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 200 பேருக்கு தொற்று உறுதியானது . இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27,828 ஆக அதிகரித்தது. கடந்த சில வாரங்களில் 100 பேர் என உறுதி பதிவான நிலையில் தற்போது 200 ஐ தாண்டி உள்ளது. இதுதான் அதிகபட்ச கொரோனா பாதிப்பாமாகும். மாவட்டத்தில் இதுவரை 305 பேர் உயிரிழந்துள்ளனர்

இந்தநிலையில் ஊரடங்கு கட்டுப்பாட்டுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் கடலூர் புதுவை எல்லையான ஆல்பபேட்டை சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். சென்னை, புதுவையில் மற்றும் வெளமாநிலத்தில் இருந்தும் வரக்கூடிய வாகனங்களை போலீசார் தீவிரமாக  கண்காணித்து வருகின்றனர்.

மேலும் படிக்க... கொரோனா தடுப்பூசி தயாரிப்பாளர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

கொரொனா பரவலை தடுக்கும் விதமாக கடலூர் அல்ப்பேட்டை சோதனை சாவடியில் போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுவையில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு வரக்கூடிய அனைத்து பேருந்துகளையும், வாகனங்களையும் நிறுத்தி கிருமி நாசினி தெளித்து பின் வரும் வாகனங்களில் அமர்ந்திருக்கக் கூடிய பயணிகளுக்கு உடல் வெப்பநிலை சோதனை செய்த பின்னரே மாவட்டத்திற்கு உள்ளே அனுமதித்து வருகின்றனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: