பூந்தமல்லியில் ஒரேநாளில் சி.ஆர்.பி.எஃப் போலீசார் 30 பேருக்கு கொரோனா

சென்னையை அடுத்த பூந்தமல்லியிலுள்ள மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையில் பணியாற்றும் 30 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அந்தப் பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூந்தமல்லியில் ஒரேநாளில் சி.ஆர்.பி.எஃப் போலீசார் 30 பேருக்கு கொரோனா
சி.ஆர்.பி.எஃப்
  • Share this:
பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியில் உள்ள மத்திய பாதுகாப்பு படை போலீஸ் 77-வது பட்டாலியன் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் படை போலீசார் உள்ளனர். நேற்று முன்தினம் அருகிலுள்ள பொது சுகாதார நிறுவனத்தில் 47 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களை ஆவடியில் உள்ள ரிசர்வ் போலீஸ் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய ரிசர்வ் படை போலீசார் 30 பேருக்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இங்கு பணிபுரிபவர்கள் அடிக்கடி ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் படை போலீஸ் தலைமை அலுவலகத்திற்கு சென்று வருவது வழக்கம். எனவே அங்கு உள்ளவர்களுக்கும் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதியில் பொது சுகாதார நிறுவனம் மற்றும் வெடிகுண்டு வழக்குகள், என்.ஐ.ஏ வழக்குகள் விசாரிக்கும் நீதிமன்றம், தனி கிளைச் சிறை இருப்பதால் அதிகாரிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பூந்தமல்லி துணிக்கடையில் பணிபுரியும் 50 ஊழியர்களுக்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது மத்திய ரிசர்வ் படை போலீசார் 30 பேருக்கும் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பூந்தமல்லியை பொறுத்த வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் கொத்து கொத்தாக உறுதி செய்யப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
First published: July 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading