கொரோனாவிலிருந்து தப்பிக்க டிராவிட் ஸ்டைல் தான் பெஸ்ட்..! கிரிக்கெட் ரசிகரின் பலே ஐடியா

கொரோனாவிலிருந்து தப்பிக்க டிராவிட் ஸ்டைல் தான் பெஸ்ட்..! கிரிக்கெட் ரசிகரின் பலே ஐடியா
ராகுல் டிராவிட்
  • Share this:
கொரோனா வைரஸிலிருந்து தப்பிக்க ராகுல் டிராவிட் ஸ்டைல் சிலவற்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ள கிரிக்கெட் ரசிகரின் பதிவு அனைவரையும் ஈர்த்துள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 191 நாடுகளில் தடம் படித்துள்ளது. தற்போது சீனாவில் கட்டுபாட்டில் உள்ள இந்த வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் கோரத்தாண்டவமாடி வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் 137 பேர் பாதிக்கப்பட்டும், 3 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வழிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.


இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர் டிராவிட்டின் கிரிக்கெட் ஸ்டைல்களை ட்விட்டரில் பதிவிட்டு இதை செய்தாலே போதும் கொரோனாவிலிருந்து நீங்கள் எளிதாக தப்பலாம் என்று பதிவிட்டுள்ளார்.கொரோனவிலிருந்து தப்பிக்க பிரச்னைகளிலிருந்து விலகி இருப்பது, கடினமான  சூழ்நிலைகளிலும் கடைசி வரை போராடுவது, சரியான தருணத்தில் சிறந்த முடிவெடுப்பது போன்ற டிராவிட்டின் செயல்களை கிரிக்கெட் ரசிகர் சுட்டிக்காட்டி உள்ளது இணையத்தில் அனைவரையும் கவர்ந்துள்ளது.
First published: March 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading