கொரோனா

  • Associate Partner
  • deepavali
  • deepavali
  • deepavali

பட்டாசு புகையால் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு: மருத்துவர்கள் விளக்கம்..

தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதன் மூலமாக கொரோனா பாதிப்பு அதிக்கரிலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பட்டாசு புகையால் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு: மருத்துவர்கள் விளக்கம்..
கோப்புப் படம்
  • News18 India
  • Last Updated: November 15, 2020, 10:08 AM IST
  • Share this:
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து ஒரு நாள் சராசரி 2500க்குள் உள்ளது. இதில் பெரும்பாலனவர்கள் அறிகுறி இல்லாமல் கொரோனாவல் பாதிக்கப்படுபவர்கள். இவர்களால் மற்றவர்களுக்கு நோய் பரவும் வாய்ப்பு குறைவு. ஆனால் தீபாவளியில் பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் புகை சுவாச பாதையை தாக்கி, அறிகுறி இல்லாத ஒருவருக்கு இருமல் உள்ளிட்ட அறிகுறி ஏற்படும் எனவும், இதனால் மற்றவர்களுக்கு கொரோனா பரவலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அதேபோல், தீவிர அறிகுறிகளுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, பின்னர் மீண்டவர்களுக்கு வைரஸ் பாதிப்பு நெகடீவ் என வந்திருந்தாலும், நுரையீரல் பாதிப்பு சீரடைய சில வாரங்கள் ஆகும் என்றும், அவர்கள் பட்டாசு புகையை சுவாசிக்க நேர்ந்தால் நுரையீரல் பாதிப்பு மேலும் தீவிரமடையும் என்றும் நுரையீரல் சிறப்பு மருத்துவர் அனந்த சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அதிக ஒலி எழுப்பும் அல்லது அதிக நேரம் வெடிக்கும் பட்டாசுகளை கொரோனா நோயாளிகள் இருக்கும் இடத்தில் வெடிக்க வேண்டாம் எனவும், அவ்வாறு வெடிக்கும் போது காற்றில் ஆக்சிஜன் அளவு குறைந்து முதியோர் மற்றும் கொரோனா தொற்றாளர்களை பாதிக்கும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


மேலும் படிக்க...சென்னை கோயம்பேட்டில் கடத்தப்பட்ட மூன்றரை மாத பெண் குழந்தை மீட்பு.. என்ன நடந்தது?சுற்றுச்சூழல் மாசு மற்றும் கொரோனா தொற்றாளர்களை கருத்தில் கொண்டு டெல்லி, ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட 8 மாநிலங்கள் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளன. ஆனால் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு தீபாவளி பட்டாசு விற்பனைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
First published: November 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading