CPI LEADER NALLAKANNU CONFIRMED CORONA POSITIVE VAI
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு கொரோனா...
நல்லகண்ணு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
95 வயதான நல்லக்கண்ணு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்து வந்தார். இந்நிலையில் அவரது குடும்பத்தில், மகள் ஆண்டாள், பேரன், பேத்தி என மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதனால் நல்லகண்ணுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மூத்த அரசியல் தலைவர் நல்லக்கண்ணு கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது வேதனை அளிப்பதாகவும், அவர் விரைவில் குணமடைந்து பொது வாழ்க்கையை தொடர வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.
நாளை முதல் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. இதற்காக, தடுப்பூசி போடுவதற்காக cowin.gov.in. என்ற இணைய முகவரியில் பதிவு செய்யலாம் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசண் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா தடுப்பூசி போடுவதற்கு, ஆதார் மற்றும் வாக்காளர் அட்டையை தவிர்த்து பிற சான்றுகளையும் பயன்படுத்தலாம் என கூறியுள்ளார். அதன்படி, வங்கி பாஸ் புக், பாஸ்போர்ட், குடும்ப அட்டை ஆகியவற்றை சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.